அன்னை தெரசா மகளிர் பல்கலை படிப்புகளும், சென்னை வளாகமும்
அன்னை தெரசா மகளிர் பல்கலை படிப்புகளும், சென்னை வளாகமும்
UPDATED : ஜூன் 21, 2014 12:00 AM
ADDED : ஜூன் 21, 2014 04:46 PM
கொடைக்கானலில் அமைந்துள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில், ரெகுலர் முறையில் பல்வேறான முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், இப்பல்கலை, சென்னையில் தனக்கான வளாகத்தையும் கொண்டுள்ளது.
படிப்பு விபரங்கள்
நுழைவுத்தேர்வு தேவைப்படாத படிப்புகள்
முதுநிலை கலைப் படிப்புகள்
எம்.ஏ., வரலாறு, ஆங்கிலம், மாஸ் கம்யூனிகேஷன், சோசியாலஜி, தமிழ், பொருளாதாரம் மற்றும் சோசியல் ஒர்க் உள்ளிட்ட பல படிப்புகளும், எம்.எட்., மற்றும் பி.எட்(special education: MR) ஆகிய படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
முதுநிலை அறிவியல் படிப்புகள்
எம்.எஸ்சி., கணிதம் மற்றும் விசுவல் கம்யூனிகேஷன் மற்றும் உணவு மற்றும் ஊட்டச்சத்து உள்ளிட்ட பல்வேறான படிப்புகள் வழங்கப்படுகின்றன. எம்.எட்., பி.எட்., (SE-MR) படிப்புகள், கொடைக்கானல் மற்றும் மதுரை வளாகங்களில் மட்டுமே வழங்கப்படுகின்றன.
நுழைவுத்தேர்வு எழுத வேண்டிய படிப்புகள்
எம்.பில்., ஆங்கிலம், கல்வியியல், பொருளாதாரம், வணிகம், சோசியாலஜி, உளவியல், வரலாறு மற்றும் கணிதம் உள்ளிட்ட பல படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவைதவிர, எம்.சி.ஏ., மற்றும் எம்.பி.ஏ., படிப்புகளும் உண்டு.
கொடைக்கானல் வளாகத்தில் மட்டும் வழங்கப்படும் நுழைவுத்தேர்வற்ற படிப்புகள்
எம்.எஸ்சி., பயோடெக்னாலஜி, தாவரவியல், இயற்பியல், வேதியியல், வழிகாட்டல் மற்றும் ஆலோசனை வழங்கல் உள்ளிட்ட பல படிப்புகள் வழங்கப்படுகின்றன.
எம்.பில்., நிலையில், பயோடெக்னாலஜி, தாவரவியல், இயற்பியல் மற்றும் வேதியியல் உள்ளிட்ட பல படிப்புகள் வழங்கப்படுகின்றன.
ரெகுலர் எம்.பில்., படிப்புகள்
கணிப்பொறி அறிவியல், டெக்ஸ்டைல் அன்ட் குளோத்திங், புட் சர்வீஸ் மேனேஜ்மென்ட் மற்றும் டயடடிக்ஸ், மேலாண்மை, கணிதம், வரலாறு, ஆங்கிலம், தமிழ், வணிகவியல், நூலக அறிவியல், கல்வியியல் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் உள்ளிட்ட பல்வேறான படிப்புகள் வழங்கப்படுகின்றன.
பகுதிநேர எம்.பில்., படிப்புகள்
ரெகுலர் எம்.பில்., படிப்பில் வழங்கப்படும் பாடப்பிரிவுகள் அனைத்தும், பகுதிநேர எம்.பில்., படிப்பிற்கும் வழங்கப்படுகின்றன.
சென்னை வளாகம்
கொடைக்கானலில் இருக்கும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்திற்கு, சென்னையிலும் வளாகம் உள்ளது என்பது பல மாணவர்களுக்கு தெரியுமா என்பது சந்தேகமே!
ஆனால், சென்னை சைதாப்பேட்டையில் அந்த வளாகம் இயங்கி வருகிறது மற்றும் அங்கே எம்.பில்., படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
சென்னை வளாக முகவரி
சென்னை மையம்
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
ஆராய்ச்சி மற்றும் நீட்டிப்பு மையம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி வளாகம்
சைதாப்பேட்டை
சென்னை - 15
தொலைபேசி - 044 - 24347222.
