UPDATED : ஜூன் 23, 2014 12:00 AM
ADDED : ஜூன் 25, 2014 10:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொறியியல் கவுன்சிலிங்கிற்கான நடைமுறை செயல்பாடு கடந்த மே மாதம் 2ம் தேதி தொடங்கியது.
அதற்கடுத்து, பூர்த்திசெய்த விண்ணப்பத்தை சமர்ப்பித்தல், ரேண்டம் எண் ஒதுக்குதல், ரேங்க் பட்டியல் வெளியிடுதல், விளையாட்டு ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் விளையாட்டு ரேங்க் பட்டியல் வெளியிடுதல் பல்வேறு பணிகள் நிறைவடைந்தன.
இப்போது, நேரடி கவுன்சிலிங் தொடங்கிவிட்டது. முதல்கட்டமாக, விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சிலிங் தொடங்கியுள்ளது. ஜுன் 23ம் தேதி தொடங்கும் இந்த கவுன்சிலிங், 2 நாட்கள் மட்டுமே நடைபெறும். ஜுன் 24ம் தேதி நிறைவுபெறும்.