தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி உதவித் தொகையில் மோசடி: பாலிடெக்னிக் மாணவர்கள் மறியல்

கல்வி உதவித் தொகையில் மோசடி: பாலிடெக்னிக் மாணவர்கள் மறியல்

கல்வி உதவித் தொகையில் மோசடி: பாலிடெக்னிக் மாணவர்கள் மறியல்


UPDATED : ஜூன் 25, 2014 12:00 AM

ADDED : ஜூன் 25, 2014 11:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 25, 2014 12:00 AM ADDED : ஜூன் 25, 2014 11:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே கல்வி உதவித் தொகையில் மோசடி செய்வதாக கூறி, தனியார் பாலிடெக்னிக் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவில் ரோட்டில் உள்ள பாலிடெக்னிக் மாணவர்கள், கல்வி உதவித் தொகை அளிப்பதில் தாமதம் ஆவதை கண்டித்து, ஆறு மாதம் முன் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் பேசி கைவிட செய்தனர்.

நேற்று காலை கல்வி உதவித் தொகை அளிப்பதில் மோசடி நடப்பதாக கூறி, இந்திய மாணவர் சங்கம் சார்பில் மீண்டும் மறியல் நடந்தது. காலை 9.15 மணி முதல் 9.50 மணி வரை போக்குவரத்து பாதித்தது. ராஜபாளையம் தெற்கு இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார், சமரசம் பேசி மறியலை கைவிட செய்தனர். மாணவ பிரதிநிதிகள், பாலிடெக்னிக் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பின் கலைந்து சென்றனர்.

இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் பாரதி, "மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கும்போது ஆயிரம் ரூபாய், புதிதாக சேரும் மாணவர்களிடம் 500 ரூபாய் பிடித்தம் செய்கின்றனர். இதை கண்டித்து மறியல் நடந்தது" என்றார்.

பாலிடெக்னிக் நிர்வாகத்தினர், "அனுமதிக்கப்பட்ட கட்டணம் தான் பெறுகிறோம். மற்றவர்கள் தூண்டுதலால் பிரச்னை ஏற்படுகிறது" என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us