கவியரசு கண்ணதாசன் படித்த பள்ளியில் மாணவர்கள் கவிதை அஞ்சலி
கவியரசு கண்ணதாசன் படித்த பள்ளியில் மாணவர்கள் கவிதை அஞ்சலி
UPDATED : ஜூன் 25, 2014 12:00 AM
ADDED : ஜூன் 25, 2014 12:06 PM
தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் பகுதியில் ஒட்டநத்தம் கிராமம் உள்ளது. இங்குள்ள ஸ்ரீ ராமானுஜ இந்து நடுநிலைப்பள்ளியில் 1934 ம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் நான்காம் வகுப்பு படித்துள்ளார்.
கண்ணதாசன் குறித்த ஆய்வுக்கு வந்தவர் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து 1934 ம் ஆண்டு பள்ளியின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது. அதில் சாத்தனார் மகன் கண்ணதாசன், நான்காம் வகுப்பு படித்துள்ளதாக தகவல் உள்ளது.
அப்போது பருத்தி வணிகத்திற்கு, இந்தப்பகுதிக்கு வந்த சாத்தனார் சிறுகூடல்பட்டியை சேர்ந்தவர். தற்போது ஒட்டநத்தத்தில் தங்கியிருந்ததாக, ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கவிதாஞ்சலி
கவியரசு கண்ணதாசன் 88வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஸ்ரீராமானுஜ இந்து நடுநிலைப்பள்ளியில் முதன் முறையாக கொண்டாடப்பட்டது.
இதில் தலைமையாசிரியர் சீனிவாசன் தலைமை வகித்தார். பாரதியார் நினைவு அறக்கட்டளை நிறுவனர் முத்துமுருகன் முன்னிலை வகித்தார். மாணவர்கள் கவிதைவாசித்து அஞ்சலி செலுத்தினர். பின் சப் கலெக்டர் விஜயகார்த்திகேயன் விழாவில் பங்கேற்று கண்ணதாசன் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
கவிதைப்போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
