தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐந்து அண்ணா பல்கலை கல்லூரிகள் மூடல்; கலந்தாய்வில் சேர்க்க மாணவர்கள் போராட்டம்

ஐந்து அண்ணா பல்கலை கல்லூரிகள் மூடல்; கலந்தாய்வில் சேர்க்க மாணவர்கள் போராட்டம்

ஐந்து அண்ணா பல்கலை கல்லூரிகள் மூடல்; கலந்தாய்வில் சேர்க்க மாணவர்கள் போராட்டம்


UPDATED : ஜூன் 25, 2014 12:00 AM

ADDED : ஜூன் 25, 2014 12:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 25, 2014 12:00 AM ADDED : ஜூன் 25, 2014 12:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி: தமிழகத்தில் நெல்லை, மதுரை உள்ளிட்ட ஐந்து இடங்களில் துவங்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகங்களில் பி.இ. படிப்புகளை தொடர்ந்து செயல்படுத்த, கவுன்சிலிங்கில் சேர்க்கவேண்டும் என கோரி மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் 2007ல் நெல்லை, மதுரை, திருச்சி,சென்னை, கோவை ஆகிய இடங்களில் அண்ணா பொறியியற் பல்கலைக்கழகங்கள் துவக்கப்பட்டன. இந்த பல்கலைகழகங்களில் பி.இ. மற்றும் பி.டெக். ஆகிய இளநிலை பொறியியல் படிப்புகளும், எம்.இ. வகுப்புகளும் நடத்தப்பட்டன. இவற்றின் மூலம் ஆயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் பயனடைந்தனர்.

கடந்த 2011ல் அண்ணா பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. அவை வெறும் மண்டல கல்லூரிகளாக மட்டும் செயல்படும் எனவும் சென்னையில் செயல்படும் அண்ணா பல்கலை மட்டுமே தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டது. அந்தந்த அண்ணா பல்கலைகளில் பணியாற்றியவர்கள் மீண்டும் பழைய இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

இருப்பினும் அண்ணா பல்கலை மண்டல மையங்கள் செயல்பட்டுவந்தன. அங்கு பி.இ. வகுப்புகள் தொடர்ந்தது. தற்போது நெல்லை உள்ளிட்ட அண்ணா பல்கலைகளில் பி.இ. படிப்பிற்கு மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு இரண்டாம் ஆண்டு முதல் மாணவர்கள் மட்டும் படிப்பை தொடர்வார்கள். படிப்படியாக இனி பி.இ.,படிப்பு நிறுத்தப்படும்.

இதனை எதிர்த்தும் ஏற்கனவே அறிவித்தபடி அண்ணா மண்டல கல்லூரிகளில் பி.இ. படிப்புகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியும் நெல்லையில் இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் உச்சி மாகாளி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us