தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/1,000 பாலிடெக்னிக் கல்லூரிகளை துவக்க மத்திய அரசு முடிவு

1,000 பாலிடெக்னிக் கல்லூரிகளை துவக்க மத்திய அரசு முடிவு

1,000 பாலிடெக்னிக் கல்லூரிகளை துவக்க மத்திய அரசு முடிவு


UPDATED : ஜன 27, 2009 12:00 AM

ADDED : ஜன 27, 2009 04:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 27, 2009 12:00 AM ADDED : ஜன 27, 2009 04:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதன்மூலம், ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு தொழில் கல்வி வழங்கப்படும்.
இத்திட்டத்தை மூன்றுகட்டமாக நிறைவேற்றும் மனிதவள அமைச்சகரத்தின் முடிவுக்கு ஏற்கனவே, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக 737 கோடியே 82 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு பாலிடெக்னிக் கல்லூரியிலும் தலா 180 மாணவர்கள் சேர்க்கப்படுவர். சில கல்லூரிகளில் 300 மாணவர்கள் வரையிலும் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்தியாவில் ஆயிரத்து 500 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுக்கு 4.5 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.
முதற்கட்டமாக, 300 பாலிடெக்னிக் கல்லூரிகள் துவக்க, ஒவ்வொன்றிற்கும் தலா ரூ.12 கோடியே 3 லட்சம் நிதி வழங்கப்பட உள்ளது. மார்ச் இறுதியில் ரூ.100 கோடியை மத்திய அரசு வழங்குகிறது.
அடுத்ததாக, 300 கல்லூரிகளை தனியார் - பொதுமக்களின் நிதியிலும், 400 கல்லூரிகளை முழுவதும் தனியார் நிதியிலும் துவக்கப்படும், என்று அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us