தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புலம்பெயர்ந்த தமிழர்கள் மாநாடு: ஆய்வுக் கட்டுரை வழங்க அழைப்பு

புலம்பெயர்ந்த தமிழர்கள் மாநாடு: ஆய்வுக் கட்டுரை வழங்க அழைப்பு

புலம்பெயர்ந்த தமிழர்கள் மாநாடு: ஆய்வுக் கட்டுரை வழங்க அழைப்பு


UPDATED : ஜூன் 26, 2014 12:00 AM

ADDED : ஜூன் 26, 2014 10:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 26, 2014 12:00 AM ADDED : ஜூன் 26, 2014 10:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: "தமிழர் அடையாளம் மற்றும் பண்பாட்டை பாதுகாக்கும் தலைப்பில், புலம்பெயர்ந்த தமிழர்களின் முதல் மாநாடு, மொரீஷியஸ் நாட்டில் ஜூலை 23 முதல் 27ம் தேதி வரை நடக்கிறது" என மொரீஷியஸ் நாட்டின் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழர்கள், அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் வாழ்கின்றனர். தொழில் ரீதியாக, பல நூறு ஆண்டுகளுக்கு முன் வெளிநாடுகளுக்குச் சென்ற இவர்களது எண்ணிக்கை 2.50 கோடி இருக்கும். இவர்கள், எங்கு வாழ்கின்றனரோ அந்நாட்டு மொழி, பழக்க வழக்கங்களை, பின் பற்றுகின்றனர். இவர்களில், பலருக்கு தமிழ் பேச, எழுத, படிக்கத் தெரியாது. ஆனால், தமிழ் பண்பாட்டை பின்பற்றியே வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர், தாய் நாட்டுடன் தொடர்பு கொள்ளும் ஆர்வத்துடன் உள்ளனர். எனவே, புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில், தமிழ் அடையாளத்தையும், பண்பாட்டையும் பாதுகாக்கும் நோக்கில், புலம்பெயர்ந்த தமிழர்கள் மாநாட்டை மொரீஷியஸ் நாட்டின் மோகா நகரில் உள்ள மகாத்மா காந்தி நிலையத்தில் ஜூலை 23ம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு நடத்துகிறோம்.

மொரீஷியஸ் அரசு உதவியுடன் இம்மாநாடு நடக்கிறது. மாநாட்டை மொரீஷியஸ் பிரதமர் துவக்கி வைக்கிறார். மாநாட்டில் ஆய்வரங்கம், இலக்கியம், கட்டுரை மற்றும் ஆராய்ச்சி அமர்வுகள் நடக்கவுள்ளன. புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் குறித்து தீர்மானங்கள், மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளன.

இம்மாநாட்டில் 40 நாடுகளில் வாழும் தமிழ் அறிஞர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். தமிழக அரசின் சார்பில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளோம். முதல்வர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டால் அவர் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம்.

மாநாட்டைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான நிரந்தர அமைப்பு உருவாக்கப்படும். அதன்மூலம் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பிரச்னைகளுக்கான தீர்வுக்கு தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநாட்டை முன்னிட்டு தமிழ் ஓலைச் சுவடிகள் கண்காட்சி நடத்தப்படுகிறது. ஓலைச் சுவடிகளை டிஜிட்டல் முறையில் பார்வையாளர்களுக்கு விவரிக்கவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் ஆய்வு கட்டுரை வழங்க விருப்பம் உள்ளவர்கள் இம்மாதம் 31ம் தேதிக்குள் இணையதள முகவரிக்கு அனுப்பலாம்.

மேலும் விவரங்களுக்கு சென்னையில் உள்ள ஆசியவியல் நிறுவன இயக்குனர் ஜான் சாமுவேலை 044 2450 1851, 98405 26834 என்ற தொலைபேசி எண்ணிலும், இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு ஆறுமுகம் பரசுராமன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us