தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குடவோலை தேர்தல்: சோழர் காலத்தை நினைவுபடுத்தும் அரசுப்பள்ளி

குடவோலை தேர்தல்: சோழர் காலத்தை நினைவுபடுத்தும் அரசுப்பள்ளி

குடவோலை தேர்தல்: சோழர் காலத்தை நினைவுபடுத்தும் அரசுப்பள்ளி


UPDATED : ஜூன் 26, 2014 12:00 AM

ADDED : ஜூன் 26, 2014 11:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 26, 2014 12:00 AM ADDED : ஜூன் 26, 2014 11:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆனைமலை: ஆனைமலை அருகே அரசுப்பள்ளியில் 197 வாக்காளர்கள், 12 வேட்பாளர்கள், ஒரே நாளில் மனு தாக்கல், ஓட்டுப்பதிவு, ஓட்டு எண்ணிக்கை முடிந்து முடிவும் அறிவிக்கப்பட்டது. பள்ளியில் மாணவர் மன்ற தேர்தல் தான் இப்படி கலக்கலாக நடந்தது. தேர்தல் முடிவில் முதலமைச்சர் பதவி பிரமாணம் ஏற்றுக்கொண்டார்.

ஆனைமலை அருகே பெரியபோதுவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின், மாணவர் மன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. 2014ம் ஆண்டுக்கான இத்தேர்தல், சோழர்கள் கால குடவோலை முறையில் நடத்தப்பட்டது. மொத்தம் 197 மாணவ வாக்காளர்கள் ஓட்டளிக்கும் தகுதியினை பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

பெரிய போது மாணவர் மன்றத்தின் முதலமைச்சர் பதவிக்கு 12 பேர் போட்டியிட்டனர். அவர்களில் 4 பேர் பெண் வேட்பாளர்கள். மதியம் ஒரு மணிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரியான, இடைநிலை ஆசிரியை தனலட்சுமியிடம் தங்களின் பெயர்களை பதிவு செய்தனர்.

போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களின் பெயர்களை மாணவர்களிடையே கூறி தங்களுக்கு ஓட்டுப்போடுமாறு கேட்டுக்கொண்டனர். இதையடுத்து மதியம் 2.30 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. மாணவ வாக்காளர்களை ஒழுங்குபடுத்தும் பணியில், பள்ளியின் சாரணர் படையினர் ஈடுபட்டனர்.

மாணவ வாக்காளர்கள், முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடுபவர்களை தேர்ந்தெடுக்க, அட்டையால் மறைக்கப்பட்ட இடத்தில், தேர்ந்தெடுக்க விரும்பும் வேட்பாளரின் பெயரை சீட்டில் எழுதி, அருகில் உள்ள குடத்தில் போட்டனர். விறு விறுப்பாக நடைபெற்ற ஓட்டுப்பதிவு மாலை 3.45க்கு முடிவடைந்தது.

மொத்தம் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து ஓட்டு எண்ணிக்கை துவங்கி, முடிவு அறிவிக்கப்பட்டது. மாணவன் நவீன் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து தலைமையாசிரியர் திருநாவுக்கரசு, மாணவர் மன்ற முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தலைமையாசிரியர் மற்றும் மாணவர் மன்றத்தின் முதலமைச்சர் இணைந்து போட்டியிட்ட வேட்பாளர்களிலிருந்து கல்வி, சுகாதாரம், சத்துணவு, விளையாட்டு, மருத்துவம், மின்சாரம் துறைக்கான அமைச்சர்களை தேர்ந்தெடுத்தனர்.

மாணவர்களுக்கு, பள்ளியிலிருந்து இடைநின்ற மாணவர்களை கண்டுபிடித்து, மீண்டும் பள்ளியில் சேர்க்க குழு அமைக்கப்படும், படிப்பில் பின்தங்கிய மாணவர்களின் முன்னேற்றத்திற்காக குழுகற்றல் முறை அறிமுகப்படுத்தப்படும், கழிப்பிடங்களில் சுத்தம் மற்றும் பராமரிப்பு கண்காணிக்கப்படும், வகுப்பறைக்கு ஒரு குப்பைத்தொட்டி வழங்கப்படும்.

பள்ளியின் அனைத்து அறைகளிலும், பள்ளி நேரம் முடிந்து செல்லும்போது மின் சாதனங்களுக்கான மின் சப்ளை துண்டிக்கப்பட்டுள்ளதா என மேற்பார்வையிட குழு அமைக்கப்படும், விளையாட்டு சாதனங்கள் பராமரிக்கப்படும், சத்துணவில் காய்கறிகள், பருப்பு சரியான அளவில் போடப்படுகிறதா என்பதை உணவு தயாரிக்கும் போது ஆய்வு மேற்கொள்ளப்படும் என, புதிதாக பொறுப்பேற்ற மாணவர் மன்றத்தின் முதலமைச்சர் மற்றும் பிற அமைச்சர்கள் உறுதியளித்தனர்.

தேர்தல் நடத்தப்பட்டது ஏன்?

பள்ளி தலைமையாசிரியர் திருநாவுக்கரசு கூறுகையில், "பண்டைய தமிழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க குடவோலைத்தேர்தல் முறையை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டியும், மாணவர்களுக்கு சமூக அக்கறை மற்றும் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டால், அதில் சிறப்பாக செயல்படுவது எப்படி என்பதற்கான பயிற்சியினை மாணவப் பருவத்திலேயே பெற்று கொள்ளும் வகையில் இந்த தேர்தல் நடத்தப்பட்டது" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us