பள்ளி மாணவ மாணவிகள் எட்டு பேருக்கு வாந்தி, மயக்கம்
பள்ளி மாணவ மாணவிகள் எட்டு பேருக்கு வாந்தி, மயக்கம்
UPDATED : ஜூன் 26, 2014 12:00 AM
ADDED : ஜூன் 26, 2014 11:32 AM
திருநெல்வேலி: நெல்லை அருகே பள்ளி ஆசிரியை வழங்கிய பிஸ்கட்களை சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே பாப்பான்குளத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. நேற்று மாலையில் அங்கு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியை ஒருவர் பிஸ்கட்கள் வழங்கியுள்ளார். அதனை சாப்பிட்ட ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட ஆறாம் வகுப்பு மாணவிகள் இசைவாணி, மாரிச்செல்வி, கவிதா, கஸ்தூரி, மாணவர்கள் மனோஜ், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட எட்டு பேருக்கும் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சையளிக்கப்பட்டது. சிலர் தொடர்ந்து மயக்க நிலையில் இருந்ததால் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர்.
சம்பவம் குறித்து கடையம் போலீசார் மற்றும் கல்வித்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஆசிரியை கொடுத்த பிஸ்கட் காலாவதியானவையாக இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் குழந்தைகள் பாதிப்பில்லாமல் தேறி வருகின்றனர்.
