தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரை மாவட்டத்தில் அரசின் நீட்ஸ் திட்டம் தொய்வு

மதுரை மாவட்டத்தில் அரசின் நீட்ஸ் திட்டம் தொய்வு

மதுரை மாவட்டத்தில் அரசின் நீட்ஸ் திட்டம் தொய்வு


UPDATED : ஜூன் 26, 2014 12:00 AM

ADDED : ஜூன் 26, 2014 11:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 26, 2014 12:00 AM ADDED : ஜூன் 26, 2014 11:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மாவட்டத்தில் அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில்(நீட்ஸ்) புதிய தொழில்முனைவோரை அடையாளம் காண்பதில் இரண்டாண்டுகளாக இலக்கை எட்டவில்லை.

இரண்டாண்டுகளுக்கு முன் முதல் தலைமுறை தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் மானியத்துடன் கூடிய நீட்ஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மாவட்ட தொழில் மையத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ரூ.5 லட்சம் முதல் ரூ.ஒரு கோடி வரை இத்திட்டத்தின் கீழ் தொழில் துவங்கலாம். திட்டமதிப்பீட்டில் 25 சதவீதம் அரசின் மானியம் உண்டு. தொழில் துவங்குவோர் முதல் தலைமுறையினராக இருக்க வேண்டும். பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு உண்டு. இவ்வளவு சலுகைகள் வழங்கப்பட்டாலும், மதுரை மாவட்டத்தில் இதுவரை இலக்கை எட்டவில்லை.

2013 -14ம் ஆண்டில் மதுரைக்கு ரூ.2.40 கோடி மானியம் கிடைத்தது. ஆனால், மார்ச் 2014 வரை 12 பேர் தொழில் துவங்கியதன் மூலம் ரூ.85.15 லட்சம் மட்டுமே மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதில் நான்கு பெண்கள் பயன்பெற்றுள்ளனர். மூன்றில் ஒருபங்கு மானியம் வழங்கிய நிலையில், இந்தாண்டும் ரூ.2.40 கோடி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் ரூ.1.6 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

மானியம் குவிந்திருந்தாலும், தொழில் துவங்குவோர் வராத காரணம் குறித்து மைய பொது மேலாளர் சாந்தகுமார் கூறியதாவது: மதுரையில் பதவியேற்று ஒரு வாரம்தான் ஆகிறது. தொய்வு ஏற்பட்டதற்கான காரணங்கள் ஆய்வு செய்யப்படும். முதல்கட்டமாக நீட்ஸ் திட்டத்தில் தொழில் துவங்கி வெற்றிகரமாக செயல்படுபவர்களைப் பற்றி, கையேடு தயாரித்துள்ளோம். இதை வங்கிகளிடம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.

ஏற்கனவே விண்ணப்பம் கொடுத்த தொழில் துவங்காதவர்களை, வங்கியாளர்களிடம் அழைத்துச் சென்று பேச உள்ளோம். பாரத பிரதமர் வேலை வாய்ப்பு, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான திட்டம், நீட்ஸ் ஆகிய திட்டங்களில் விண்ணப்பித்துள்ளவர்களின் விவரங்களை ஆய்வு செய்து, எந்த திட்டம் அவர்களுக்கு சரியாக வருகிறது என்பதையும் விளக்க உள்ளோம், என்றார்.

தொடர்புக்கு: மாவட்ட தொழில் மையம், அழகர்கோவில் ரோடு, மதுரை, போன்: 0452 - 253 7621.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us