தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆதி திராவிடர் விடுதியில் சேர மாணவ மாணவியருக்கு அழைப்பு

ஆதி திராவிடர் விடுதியில் சேர மாணவ மாணவியருக்கு அழைப்பு

ஆதி திராவிடர் விடுதியில் சேர மாணவ மாணவியருக்கு அழைப்பு


UPDATED : ஜூன் 26, 2014 12:00 AM

ADDED : ஜூன் 26, 2014 12:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 26, 2014 12:00 AM ADDED : ஜூன் 26, 2014 12:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: "கரூர் மாவட்ட ஆதி திராவிடர் நல விடுதியில் 2014-15ம் ஆண்டு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது" என்று கலெக்டர் ஜெயந்தி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தமிழக அரசால் கரூர் மாவட்டத்தில், ஆதி திராவிடர் மாணவர்களுக்கு என 10 பள்ளி விடுதிகளும், மாணவியர்களுக்கு என ஏழு பள்ளி விடுதிகளும், கல்லூரி மாணவர்களுக்கு ஒரு விடுதியும், மாணவிகளுக்கு ஒரு விடுதியும் செயல்பட்டு வருகின்றன.

பள்ளி விடுதியில் நான்காம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் அரசு நிறுவனங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் பயிலும் மாணவ, மாணவியரும் சேரத் தகுதியுடையவர்.

அனைத்து விடுதியில் தங்கும் மாணவ மாணவியருக்கு உணவு, தங்கும் வசதி இலவசமாக அளிக்கப்படும். எஸ்.எஸ்.எல்.ஸி. வரை பயிலும் மாணவ மாணவியருக்கு விலையில்லா நான்கு செட் சீருடை, பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், பைகள், காலணிகள் வழங்கப்படும். எஸ்.எஸ்.எல்.ஸி. மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படுகின்றன.

விடுதியில் சேருவதற்கு பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கும் மேல் இருக்கக்கூடாது. இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் ஐந்து கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூரம் மாணவியருக்கு பொருந்தாது.

தகுதியுடைய மாணவ மாணவியர் விடுதி காப்பாளர், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் இருந்து இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், பள்ளி விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் பெற்றோர் ஆண்டு வருமானம் சான்றிதழ் அளிக்க தேவையில்லை. தமிழகத்தில் முகாம் வாழ், இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே ஐந்து இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us