sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மேல்நிலைப் பள்ளியாக உயரும் தரம் இருந்தும் அதிகாரிகள் அலட்சியம்

/

மேல்நிலைப் பள்ளியாக உயரும் தரம் இருந்தும் அதிகாரிகள் அலட்சியம்

மேல்நிலைப் பள்ளியாக உயரும் தரம் இருந்தும் அதிகாரிகள் அலட்சியம்

மேல்நிலைப் பள்ளியாக உயரும் தரம் இருந்தும் அதிகாரிகள் அலட்சியம்


UPDATED : ஜூன் 27, 2014 12:00 AM

ADDED : ஜூன் 27, 2014 11:15 AM

Google News

UPDATED : ஜூன் 27, 2014 12:00 AM ADDED : ஜூன் 27, 2014 11:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முகலிவாக்கம்: முகலிவாக்கம் அரசு உயர்நிலை பள்ளியை, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தும் அளவிற்கு வசதிகள் இருந்தும், கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, மாணவ, மாணவியரின் பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர்.

முகலிவாக்கம், அரசு உயர்நிலை பள்ளி வளாகம், ஒன்றரை ஏக்கர் பரப்பளவு கொண்டது. தற்போது, 6 முதல் 10ம் வகுப்பு வரை, 162 மாணவர்கள் உட்பட, 325 பேர் படிக்கின்றனர். முகலிவாக்கம், மணப்பாக்கம், மகனந்தபுரம், குன்றத்துார் ஆகிய பகுதியில் இருந்தும் மாணவ, மாணவியர் வருகின்றனர்.

நடவடிக்கை இல்லை

முன்பு, ஐந்து வகுப்பறைகள் இருந்தன. 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள், பிளஸ் 1 படிப்பை தொடர, முகலிவாக்கம் பள்ளி யில் இருந்து, 3 முதல் 5 கி.மீ., தொலைவில் உள்ள போரூர், பரங்கிமலை, பாய்கடை ஆகிய பகுதியில் செயல்படும் அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. அதனால், உயர்நிலை பள்ளியை, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த, முகலிவாக்கம் பகுதிவாசிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில், ஒரு கோடி ரூபாய் செலவில், 12 வகுப்பறை, ஒரு பரிசோதனை கூடம் கொண்ட மூன்றடுக்கு புதிய கட்டடம், கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.தற்போது, மேல்நிலை பள்ளிக்குரிய அனைத்து வசதிகளும் அந்த பள்ளியில் உள்ளன. ஆனால், பள்ளியை தரம் உயர்த்த, பள்ளி கல்வித்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும், பிளஸ் 1ல் சேர்க்க, அதிக துாரம் செல்ல வேண்டி உள்ளதால், சில பெற்றோர் பெண் பிள்ளைகளை பாதுகாப்பு கருதி, 10ம் வகுப்போடு படிப்பை நிறுத்தி, பணிக்கு அனுப்புகிற அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அச்சத்தில் பெற்றோர்

இதுகுறித்து, முகலிவாக்கம், மணப்பாக்கம், மகனதபுரம் பகுதி மாணவ, மாணவியரின் பெற்றோர் கூறியதாவது: மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த, 10 ஆண்டுகளாக கோரிக்கை வைக்கிறோம். முகலிவாக்கம் பள்ளிக்கே, 5 கி.மீ., துாரம் வரை அனுப்ப வேண்டி உள்ளது.
பிளஸ் 1 செல்ல மேலும், 5 கி.மீ., துாரம் அனுப்ப வேண்டும். பள்ளியில் இருந்து வீடு திரும்ப இரவு ஆகிவிடுவதால், பெண் பிள்ளைகளை அவ்வளவு துாரம் அனுப்ப அச்சமாக உள்ளது. உயர் அதிகாரிகள் கவனம் செலுத்தி, முகலிவாக்கம் பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கல்விதுறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த கோரிக்கை வந்தது. இதை, உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம்" என்றார்.






      Dinamalar
      Follow us