UPDATED : ஜூன் 28, 2014 12:00 AM
ADDED : ஜூன் 28, 2014 10:32 AM
டில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், ஒரு ஐ.ஐ.டி., அமைக்கப்பட வேண்டுமென, மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேண்டுகோளை விடுத்திருப்பது காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த சக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் கூறுவதாவது: தற்போதைய நிலையில், நாட்டில் மொத்தம் 16 ஐ.ஐ.டி.,கள் உள்ளன. ஆனால், முக்கிய மற்றும் பிரச்சினைக்குரிய மாநிலமான காஷ்மீரில் ஐ.ஐ.டி. இல்லை. அங்கே மனிதவளம் நிறையவே இருக்கிறது.
எனவே, ஐ.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட்டால், மாநிலத்திலிருந்து சிறந்த மனித வளங்களை உருவாக்கலாம். எனவேதான், மத்திய மனிதவள அமைச்சரிடம் அதுதொடர்பான கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை கவனமுடன் செவிசாய்ந்த மனிதவள அமைச்சர், சரியான நேரத்தில், அந்த கோரிக்கை நிச்சயமாக பரிசீலிக்கப்பட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள பல்கலைகளில், பேராசிரியர்கள் மற்றும் துணை வேந்தர்கள் ஆகியோரை நியமிக்கும் நடவடிக்கைகள் முறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.