தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டில்லி பல்கலை நான்காண்டு பட்டப்படிப்புகள்: திரும்பப் பெறப்பட்டது

டில்லி பல்கலை நான்காண்டு பட்டப்படிப்புகள்: திரும்பப் பெறப்பட்டது

டில்லி பல்கலை நான்காண்டு பட்டப்படிப்புகள்: திரும்பப் பெறப்பட்டது


UPDATED : ஜூன் 28, 2014 12:00 AM

ADDED : ஜூன் 28, 2014 11:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 28, 2014 12:00 AM ADDED : ஜூன் 28, 2014 11:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: மாணவர்களின் கடுமையான போராட்டத்தை அடுத்து நான்காண்டு இளநிலை பட்டப் படிப்பை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ள டில்லி பல்கலை, ஏற்கனவே இருந்த நடைமுறைப்படி மூன்றாண்டு பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை துவங்கும் என்றும் அறிவித்துள்ளது.

கருத்து வேறுபாடு

டில்லி பல்கலையின் சார்பில் நான்காண்டு இளநிலை பட்டப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக பல்கலை நிர்வாகம் மற்றும் பல்கலைக் கழக மானியக் குழுவான யு.ஜி.சி.க்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் குழப்பம் ஏற்பட்டது.

நான்கு ஆண்டு இளநிலை பட்டப் படிப்பு விவகாரத்தில் யு.ஜி.சி.யின் ஒப்புதல் பெறாமல் டில்லி பல்கலை தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே இந்த கல்வி ஆண்டு முதல் நான்கு ஆண்டு பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது. வழக்கம் போல் மூன்றாண்டு பட்டப் படிப்பில் மட்டுமே மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என டில்லி பல்கலைக்கு யு.ஜி.சி. அறிவுறுத்தியது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட் ஆகியவை தலையிட மறுத்து விட்டன.

ஒத்தி வைப்பு

இதையடுத்து இம்மாதம் 24ல் துவங்க வேண்டிய மாணவர் சேர்க்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பல்கலையின் அங்கீகாரம் பெற்றுள்ள 60க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடக்கவில்லை. டில்லி பல்கலை நடவடிக்கையை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். யு.ஜி.சி.யின் உத்தரவை பின்பற்ற தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த டில்லி பல்கலை நிர்வாகம் நேற்று திடீரென தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது.

இதுகுறித்து டில்லி பல்கலை துணைவேந்தர் தினேஷ் சிங் கூறியதாவது: மாணவர் சேர்க்கையில் யு.ஜி.சி.யின் வழிகாட்டுதல் பின்பற்றப்படும். பல்கலையின் அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரிகளிலும், இந்த ஆண்டு முதல் நான்கு ஆண்டு பட்டப் படிப்பு திரும்பப் பெறப்படுகிறது. மூன்றாண்டு பட்டப் படிப்பில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும்.

அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலம் கருதி, விரைவில் மாணவர் சேர்க்கை துவக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டில்லி பல்கலையின் திடீர் முடிவு குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us