பொறியியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு வாரம் மேம்பாட்டு பயிற்சி முகாம்
பொறியியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு வாரம் மேம்பாட்டு பயிற்சி முகாம்
UPDATED : ஜூன் 30, 2014 12:00 AM
ADDED : ஜூன் 30, 2014 11:23 AM
பவானி: பவானி, பருவாச்சி ஐஸ்வர்யா பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பொறியியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.
கடந்த 21 முதல் 28ம் தேதி வரை நடந்த நிகழ்ச்சிக்கு ஐஸ்வர்யா கல்வி நிறுவனங்களின் நிறுவனரும் தாளாளருமான சேகர் தலைமை வகித்தார். செயலாளர் நிர்மலாதேவி, நிர்வாக அதிகாரி சதிஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் ரவிசங்கர் வரவேற்றார்.
திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி முதல்வர் மூர்த்தி பேசியதாவது: நவீன கட்டிடவியல் முன்னேற்றத்துக்கு கணிதமே அடைப்படை காரணமாகும். கணித அடிப்படையில் கட்டிடவியலை நவீனமயம் ஆக்கவேண்டும். கணிதம் இல்லாமல் உறுதியான, கம்பீரமான கட்டிடவியலை உருவாக்க இயலாது.
கண் திருஷ்டியை போக்குவதில், வாஸ்து சாஸ்திரத்தின் பங்கு மிகவும் அதிகமானதாகும். எனவே கட்டிடவியல் பொறியாளர்கள் வாஸ்து சாஸ்திரம், கணித சாஸ்திர அடிப்படையில் கட்டிடவியலை முன்னேற்ற வேண்டும் என்றார்.
ஒரு வாரம் நடந்த முகாமில் தினமும் நான்கு ஆராய்ச்சி வல்லுனர்கள் பொறியியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, காலை ஒன்பது முதல் மாலை ஐந்து மணி வரை ஆசிரியர் மேம்பாட்டு வகுப்புகளை, செய்முறை விளக்கங்களுடன் நடத்தினர்.
நிறைவில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பாராட்டு சான்றிதழ்களை செயலாளர் நிர்மலாதேவி, முதல்வர் ரவிசங்கர் ஆகியோர் வழங்கினர். தமிழகம் மற்றும் பல மாநிலத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
