தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு: மாணவர்களை பயன்படுத்த அறிவுரை

டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு: மாணவர்களை பயன்படுத்த அறிவுரை

டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு: மாணவர்களை பயன்படுத்த அறிவுரை


UPDATED : ஜூன் 30, 2014 12:00 AM

ADDED : ஜூன் 30, 2014 11:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 30, 2014 12:00 AM ADDED : ஜூன் 30, 2014 11:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தஞ்சாவூர்: பள்ளி மற்றும் கல்லூரிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்கான முன்னேற்பாடு குறித்து ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

இதில் கலெக்டர் சுப்பையன் தலைமை வகித்து பேசியதாவது: பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயை பரப்பும் ஏ.டி.எஸ். கொசு உற்பத்தியாகும் இடங்களில் உள்ள நீரை அப்புறப்படுத்த வேண்டும். தொட்டிகளில் உள்ள நீரை எடுத்து விட்டு, வாரத்தில் ஒரு நாள் உலர வைப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தொடர்பு அலுவலராக அறிவியல் ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஒருவரை நியமித்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மாணவர்களிடையே கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தேசிய படை மாணவர்கள் மூலம் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல், பொருட்டு குடிநீர் தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்வதுடன், குடிநீர் குழாய்களை சுகாதார முறையில் பாதுகாக்க வேண்டும். தினமும் குளோரினேசன் செய்ய வேண்டும்.

மாணவர்கள், வீடுகளை சுற்றி கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து, அழித்திட அறிவுரை வழங்க வேண்டும். பள்ளி மாணவர்கள், சுகாதார உறுதிமொழி எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us