UPDATED : ஜூலை 02, 2014 12:00 AM
ADDED : ஜூலை 02, 2014 12:00 PM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 52 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.
மதுரை அருகே உள்ள தனியார் நடுநிலைப் பள்ளி பஸ், குழந்தைகளை ஏற்றி வருவதற்காக வாடிப்பட்டியில் இருந்து அய்யங்கோட்டை வழியாக ஸ்ரீபுதூர் என்ற ஊருக்கு சென்றுவிட்டு திரும்பி வரும் போது, வளைவில் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகில் இருந்த வயல்வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்து ஏற்பட்ட போது பஸ்சில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த மாணவர்களுக்கு வாடிப்பட்டி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டிரைவர் ராமகிருஷ்ணனும் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சோழவந்தான் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
