UPDATED : ஜூலை 02, 2014 12:00 AM
ADDED : ஜூலை 02, 2014 12:41 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் கடந்த 4 மாதங்களில் நடந்த 81 சாலை விபத்துக்களில் 79 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 22 பேர் சம்பவ இடத்திலு, ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலியாயினர்.
ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடப்பாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் கணக்கு விபரம் சேகரிக்கப்பட்டது.
இதில் ராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சந்தைவெளியம்மன் கோயில் வளைவு பகுதியில் ரோட்டை கடக்க முயன்ற இருவர் பலியானது தெரியவந்தது. அதேபோல் அதிவேகத்தில் டூ வீலர் ஓட்டியதாலும், ஹெல்மெட் அணியாததால் தலைக்காயத்தாலும் பலர் உயிரிழந்தது தெரியவந்தது. குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் 50 சதவீதத்திற்கும் மேலான விபத்துக்களில் உயிரிழப்பு ஏற்படுகிறது.
மாணவர்களுக்கு விழிப்பணர்வு
வாகனம் ஓட்டும்போது கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு பள்ளிகளில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தினர், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த கூட்டம் நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம், கீழக்கரை பள்ளிகளில் நடந்த இதுபோன்ற கூட்டத்தில் மாணவர்களுக்கு விபத்து குறித்த காட்சிகள் வீடியோ மூலம் விளக்கப்பட்டு வருகிறது.
