கல்வியால் சமூகம் சரியான திசையில் பயணிக்கும்: பிரணாப்
கல்வியால் சமூகம் சரியான திசையில் பயணிக்கும்: பிரணாப்
UPDATED : ஜூலை 02, 2014 12:00 AM
ADDED : ஜூலை 02, 2014 02:18 PM
டில்லி: கல்வியின் வலுவான உபகரணத்தை பயன்படுத்துவதன் மூலமாக மட்டுமே, சமூகம் சரியான திசையில் பயணிக்க முடியும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசியுள்ளார்.
சரியான கல்வியைப் பெற்ற ஒரு நபர், வாழ்க்கையைப் பற்றிய ஒரு சரியான புரிதலைப் பெற்று, அதன் பலவித அம்சங்களையும் அறிந்துகொள்வார் என்றும் அவர் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: கல்வி என்பது தனிப்பட்ட மதிப்பாய்வையும், வளர்ச்சியையும் மட்டும் கொண்டுவரவில்லை. மாறாக, மக்களிடம் மேம்பாட்டையும், நேர்மறை வளர்ச்சியையும் கொண்டு வருகிறது.
கல்வியை அடிப்படை உரிமையாக்கிய, கல்வி உரிமைச் சட்டம், ஒரு வரலாற்று நடவடிக்கையாகும். நாட்டின் மக்கள் தொகையில் கணிசமானோர் இளைஞர்கள். எனவே, இந்த மாபெரும் வளத்தை நாம் பயன்படுத்தவில்லை என்றால், வரலாறு நம்மை மன்னிக்காது.
நமது கல்வி நிறுவனங்கள், நல்ல தரம், சிறந்த ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகிய நிலைகளை அடைவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
