UPDATED : ஜூலை 02, 2014 12:00 AM
ADDED : ஜூலை 02, 2014 05:42 PM
அ நிறம் | அளவு
சென்னை: தொழிற்பிரிவில் படித்த மாணவர்களுக்கென நடத்தப்படும் தொழிற்பிரிவு கவுன்சிலிங், ஜுலை 9ம் தேதி தொடங்குகிறது.
முதல் நாளில், காலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்சிலிங் நடைபெறுகிறது. அதன்பிறகு, கட்-ஆப் மதிப்பெண் 197.00 தொடங்கி, 190.00 வரை நடைபெறும்.
அதன்பிறகு, ஜுலை 18ம் தேதி வரை இடைவிடாமல், தொழிற்பிரிவு கவுன்சிலிங் தொடர்ந்து நடைபெறும். கடைசி நாளில், கட்-ஆப் மதிப்பெண் 124.50 தொடங்கி, 77.50 வரை நடைபெற்று நிறைவடைகிறது.
இந்த கவுன்சிலிங், அண்ணா பல்கலை வளாகத்திலுள்ள ராமானுஜன் கம்யூட்டிங் மையத்தில் நடைபெறுகிறது.
அனைத்து விரிவான விபரங்களுக்கும் http://online.annauniv.edu/tnea/pdf/vocsch020714.pdf என்ற வலைதளம் செல்க.
