தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறுவர் பூங்கா நடைபாதையில் உள்ள குழிகளால் பெற்றோர்கள் அச்சம்

சிறுவர் பூங்கா நடைபாதையில் உள்ள குழிகளால் பெற்றோர்கள் அச்சம்

சிறுவர் பூங்கா நடைபாதையில் உள்ள குழிகளால் பெற்றோர்கள் அச்சம்


UPDATED : ஜூலை 03, 2014 12:00 AM

ADDED : ஜூலை 03, 2014 11:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 03, 2014 12:00 AM ADDED : ஜூலை 03, 2014 11:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி: சிவகாசி நகராட்சி சிறுவர் பூங்கா நடைபாதையில் உள்ள குழிகளால், பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.

சிவகாசி நகராட்சி கார்னேசன் பஸ் நிறுத்தம் அருகே நகராட்சி சிறுவர் பூங்கா உள்ளது. குழந்தைகள் பொழுது போக்கிற்காக இங்கு சறுக்கு, ஊஞ்சல், என விளையாட்டு உபகரணங்களுடன், பச்சை பசுமையாக உள்ளது. பூங்கா நான்கு புறமும் சிமென்ட் பேவர் பிளாக் கற்கள் பதித்த நடைபாதை உள்ளது.

இந்த நடைபாதை தெற்கு பகுதி நடைபாதையிலும், மேற்குபகுதி நடைபாதியிலும், குழாய் சீரமைப்பு வேலைக்காக பேவர் பிளாக் கற்களை பெயர்த்து எடுத்து, குழி தோண்டினர். 3 அடி ஆழத்திற்கு பெரும் பள்ளங்களாக உள்ளது. ஒரு மாதமாகியும் பள்ளம் மூடப்பட வில்லை. நடைபாதையில் ஓடிவரும் சிறுவர்கள் தோண்டப்பட்ட குழிக்குள் விழும் நிலை உள்ளது.

அபாய குழிகளால் பெற்றோர் பலரும், சிறுவர்களை, பூங்காவிற்கு அனுப்ப தயக்கம் காட்டுகின்றனர். நகரில் சிறுவர்களுக்காக உள்ள ஒரே பூங்காவும், நடைபாதையில் பள்ளங்களுடன் உள்ளது. கண்டு கொள்ளாத நகராட்சி நிர்வாகம், இதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us