தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை

அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை

அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை


UPDATED : ஜூலை 03, 2014 12:00 AM

ADDED : ஜூலை 03, 2014 11:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 03, 2014 12:00 AM ADDED : ஜூலை 03, 2014 11:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை துவங்கியது.

புதுச்சேரியில் பாரதிதாசன் மகளிர் கல்லுாரி, லாஸ்பேட்டை தாகூர் கலைக் கல்லுாரி, கதிர்காமம் இந்திராகாந்தி கலை அறிவியல் கல்லுாரி, தவளக்குப்பம் ராஜிவ்காந்தி கலைக் கல்லுாரி , மதகடிப்பட்டு காமராஜர் கல்லுாரி, வில்லியனுார் கஸ்துாரிபாய் கல்லுாரி ஆகியவை உள்ளன.

இந்த 6 அரசு கல்லுாரிகளில் இளநிலை (பி.எஸ்சி.) கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ டெக்னாலஜி, அப்ளைடு மைக்ரோ பயாலஜி, பி.காம்., வெளிநாட்டு வர்த்தகம், பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம் உள்ளிட்ட 30 பாடப் பிரிவுகளில், 2108 இடங்கள் உள்ளன.

இந்த இடங்களுக்கான, ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம், கடந்த மே 23ம் தேதி முதல் ஜூன் 16ம் தேதி வரை வினியோகிக்கப்பட்டது. மொத்தம் 5134 பேர் விண்ணப்பித்தனர். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது. மதிப்பெண் அடிப்படையில் 265 மாணவர்கள் அழைக்கப்பட்டனர்.

கலந்தாய்வில் பாடப்பிரிவுகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை உடனே வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைக்குழு தலைவர் தமிழரசி தமிழ்மணி வரவேற்றார். கன்வீனர் சூரியபிரகாஷ் வாழ்த்துரை வழங்கினார். உயர்கல்வித்துறை இயக்குநர் கரிகாலன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கினார்.

கஸ்துாரிபாய் கல்லுாரி முதல்வர் ஹேமலதா நன்றி கூறினார். இன்றைய கலந்தாய்வில் பங்கேற்க 303 மாணவர்களுக்கும், நாளை (4ம் தேதி)க கலந்தாய்வில் பங்கேற்க 270 பேருக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. முதல் கலந்தாய்வுக்கு பட்டியலில் பெயர் இருந்தும், அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாத மாணவர்கள், நேரடியாக உரிய தேதியில் கலந்தாய்வில் பங்கேற்கலாம். முதல் கலந்தாய்வு பட்டியல் www.bgcw.gov.in இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us