தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கமிஷனின் செயலராக சுந்தரவடிவேலு நியமனம்

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கமிஷனின் செயலராக சுந்தரவடிவேலு நியமனம்

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கமிஷனின் செயலராக சுந்தரவடிவேலு நியமனம்


UPDATED : ஜூலை 04, 2014 12:00 AM

ADDED : ஜூலை 04, 2014 11:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 04, 2014 12:00 AM ADDED : ஜூலை 04, 2014 11:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கமிஷனின் செயலராக, அரசின் சிறப்புச் செயலர் சுந்தரவடிவேலு நியமிக்கப்பட்டுள்ளார்.

குழந்தைகளின் அடிப்படையான உரிமைகளையும், அவர்களது நலன்களையும் பாதுகாக்கும் நோக்கத்தில், கமிஷன் அமைப்பது தொடர்பாக, கடந்த 2005ம் ஆண்டு, மார்ச் மாதத்தில், பார்லிமெண்ட்டில் சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டத்தின் அடிப்படையில், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கமிஷன், கடந்த 2007ம் ஆண்டு, மார்ச் மாதம் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும், குழந்தை உரிமை பாதுகாப்பு கமிஷன் அமைக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரியிலும், குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கமிஷன் விரைவில் அமைக்கப்பட உள்ளது. இந்த கமிஷனுக்கு, சேர்மன் மற்றும் உறுப்பினர்கள் 5 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான பணிகளை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கமிஷனின் செயலராக, சிறப்புச் செயலர் டாக்டர் சுந்தர வடிவேலு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுச் செயலகம் வெளியிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us