கோவையில் ஜுலை 7 முதல் ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு கலந்தாய்வு
கோவையில் ஜுலை 7 முதல் ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு கலந்தாய்வு
UPDATED : ஜூலை 04, 2014 12:00 AM
ADDED : ஜூலை 04, 2014 11:50 AM
உடுமலை: ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பிற்கு விண்ணப்பித்த, கோவை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, மாணவர்களுக்கான கலந்தாய்வு, கோவையில் வரும் 7 ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்கிறது.
திருமூர்த்திமலை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் திருஞானசம்பந்தர் கூறியதாவது: ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், கடந்த மே 14ம் தேதி தொடங்கி ஜூன் 9 ம் தேதி வரை, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டன. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் மொத்தமாக, 203 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
ஆசிரியர் பயிற்சி படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, வரும் 7 ம் தேதி துவங்கி, 15ம் தேதி வரை நடக்கிறது. கோவை ராஜவீதியிலுள்ள அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், மாணவர்களின் தரவரிசைப்படி கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வு, காலை 9.00 மணிக்கு துவங்குகிறது. www.tnscert.com என்ற இணையதளத்தின் வாயிலாக மாணவ, மாணவியர், இதற்கான அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் மூலமும், மாணவர்களுக்கு இக்கடிதம் அனுப்பப்படும். விண்ணப்பித்து, அழைப்பு கடிதம் கிடைக்கப்பெறாதவர்கள், 04252-265265, 7373003454 என்ற எண்களை தொடர்பு கொண்டு, கலந்தாய்வு குறித்த தகவல்களை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
