தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்று(ஜுலை 7) பொதுப்பிரிவு பொறியியல் கவுன்சிலிங்

இன்று(ஜுலை 7) பொதுப்பிரிவு பொறியியல் கவுன்சிலிங்

இன்று(ஜுலை 7) பொதுப்பிரிவு பொறியியல் கவுன்சிலிங்


UPDATED : ஜூலை 07, 2014 12:00 AM

ADDED : ஜூலை 07, 2014 10:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 07, 2014 12:00 AM ADDED : ஜூலை 07, 2014 10:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்திலுள்ள நுழைவுத்தேர்வு மற்றும் சேர்க்கை மையத்தில் இந்த கவுன்சிலிங் நடைபெறுகிறது.

முதலில் கட்-ஆப் மதிப்பெண் 200க்கு 200 பெற்றவர்களுக்கு நடைபெறுகிறது. முதல் நாளான இன்று மட்டும், 198.75 வரை கட்-ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கவுன்சிலிங் நடைபெறும்.

தமிழகத்தில், பி.இ., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை அண்ணா பல்கலையில், கடந்த மாதம் 23ம் தேதி துவங்கியது. முதலில், விளையாட்டுப் பிரிவினருக்கும், 25ம் தேதி, மாற்றுத்திறனாளி பிரிவிற்கும் கலந்தாய்வு நடந்தது. பொதுப் பிரிவினருக்கு, கடந்த 27ம் தேதி கலந்தாய்வு நடக்க இருந்தது.

புதிய பொறியியல் கல்லுாரிகளுக்கு அனுமதி அளிக்க, ஏ.ஐ.சி.டி.இ., (அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு) அவகாசம் கோரியதால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பொதுப் பிரிவினருக்கான, பி.இ.,கவுன்சிலிங் தள்ளி வைக்கப்பட்டது.

புதிய கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங், இன்று காலை துவங்கியது. ஆக., 4ம் தேதி வரை, 28 நாட்கள் கலந்தாய்வு நடக்கிறது.

"கலந்தாய்வில் பங்கேற்போருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு லட்சம் பேருக்கு, அழைப்புக் கடிதமும் அனுப்பப்பட்டு உள்ளது. மற்றவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பும் பணி நடந்து வருகிறது. அழைப்புக் கடிதம் கிடைக்காத மாணவர்கள், www.annauniv.eduஎன்ற இணையத்தளத்தில், விவரங்களை தெரிந்து கொள்ளலாம்" என அண்ணா பல்கலை தெரிவித்து உள்ளது.

தொழிற்பிரிவு படிப்பை மேற்கொண்டவர்களுக்கான பொறியியல் கவுன்சிலிங், ஜுலை 9ம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளும் மாணவர்கள், தங்களின் ஒதுக்கீட்டு நாள் வரும்போது, கவுன்சிலிங் தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 2 மணிநேரம் முன்னதாகவே அண்ணா பல்கலைக்கு வந்துவிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us