தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!


UPDATED : ஜூலை 07, 2014 12:00 AM

ADDED : ஜூலை 07, 2014 12:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 07, 2014 12:00 AM ADDED : ஜூலை 07, 2014 12:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அடுத்த வண்ணான்குடிகாடு அரசு உயர்நிலைப் பள்ளியில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் 100 சதவீத தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

ஊராட்சி தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் உதயசூரியன் வரவேற்றார். துணைத் தலைவர் சுபலட்சுமி ராஜகுமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமலிங்கம், லயன்ஸ் கிளப் தலைவர் சுப்ரமணியன், கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர்.

கடந்த மார்ச் மாதம் நடந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்கள் ஆனந்தன், விஜயகுமார், சூர்யா ஆகியோருக்கு தலா 2,000, 1,500, 1,000 ரூபாய் ரொக்கப் பரிசுசை, துணைத் தலைவர் சுபலட்சுமி, லயன்ஸ் கிளப் செயலர் கமலக்கண்ணன், குணசேகரன் ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து லயன்ஸ் கிளப் சார்பில் 100 சதவீத தேர்ச்சி வழங்கிய பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

இதில் பள்ளிக்கு 10 பிளாஸ்டிக் நாற்காலிகள், மற்றும் கட்டட நிதி 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், லயன்ஸ் கிளப் பொருளாளர் திருநாவுக்கரசு, ஊராட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர். பட்டதாரி ஆசிரியர் சந்திரகுமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us