தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருப்பதால் கட்டடங்களை அகற்ற கோரிக்கை

விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருப்பதால் கட்டடங்களை அகற்ற கோரிக்கை

விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருப்பதால் கட்டடங்களை அகற்ற கோரிக்கை


UPDATED : ஜூலை 07, 2014 12:00 AM

ADDED : ஜூலை 07, 2014 12:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 07, 2014 12:00 AM ADDED : ஜூலை 07, 2014 12:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிள்ளை: கிள்ளையில் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளியில் பாழடைந்த இரண்டு கட்டடங்களில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருப்பதால் அக்கட்டடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிள்ளை தைக்காலில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இரண்டு பள்ளி கட்டடங்கள் சேதமடைந்ததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த 2006ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது ரவுண்ட் டேபிள் இந்தியா தொண்டு நிறுவனம் சார்பில் புதியதாக பள்ளி கட்டடம் கட்டிக்கொடுத்தனர்.

தற்போது தொண்டு நிறுவனம் கட்டிக்கொடுத்த கட்டடத்தில் மாணவர்கள் படித்து வருகின்றனர். சேதமடைந்த இரண்டு பள்ளி கட்டடங்களும் நாளுக்கு நாள் வலுவிழந்து பாழடைந்து வருகிறது. பல ஆண்டாக பயன்படுத்தாமல் உள்ளதால் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால், மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

புதிய பள்ளி கட்டத்திற்கு அருகிலேயே மாணவர்கள் விளையாட, ஊஞ்சல் உள்ளிட்ட உபகரணங்களும், கழிவறை, சத்துணவு மையமும் உள்ளது. இங்கு மாணவர்கள் செல்லும்போது பாழடைந்த இரண்டு கட்டடங்களில் மேல் உள்ள  ஓடுகள் அடிக்கடி கீழே விழுந்து வருகிறது. கட்டடம் பலவீனமடைந்துள்ளதால் எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் உள்ளது.

இதுபற்றி சம்மந்தப்பட்ட ஆதிதிராவிடர் தாசில்தாருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் கடிதம் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. எனவே, விபரீதம் ஏற்படும் முன் பாழடைந்த இரண்டு பள்ளி கட்டடங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us