தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டாஜ்பால் விளையாட்டில் சாதனை படைக்கும் திருப்பூர் பள்ளி மாணவர்!

டாஜ்பால் விளையாட்டில் சாதனை படைக்கும் திருப்பூர் பள்ளி மாணவர்!

டாஜ்பால் விளையாட்டில் சாதனை படைக்கும் திருப்பூர் பள்ளி மாணவர்!


UPDATED : ஜூலை 07, 2014 12:00 AM

ADDED : ஜூலை 07, 2014 12:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 07, 2014 12:00 AM ADDED : ஜூலை 07, 2014 12:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூரை சேர்ந்த பள்ளி மாணவன் சார்லஸ், தேசிய அளவிலான டாஜ்பால் விளையாட்டு குழுவில் இடம் பிடித்துள்ளார். இவர், சர்வதேச டாஜ்பால் விளையாட்டு போட்டியில் பங்கேற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

திருப்பூர் லிட்டில் பிளவர் பள்ளி மாணவன் சார்லஸ், 15. கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளில் இருந்து சற்று மாற்றி யோசித்து, டாஜ்பால் விளையாட்டில் ஆர்வம் செலுத்தியுள்ளார். கடின பயிற்சி மேற்கொண்டு பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

மாநில அளவிலான விளையாட்டு குழுவில் இடம் பிடித்த இவர், ஜூனியர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன்பின், தேசிய அளவிலான போட்டியிலும் சாம்பியன் பட்டத்தை பெற்றதால், சர்வதேச போட்டியில் பங்கேற்கும் தேசிய அளவிலான டாஜ்பால் குழுவில் இடம்பிடித்தார். நேபாள் தலைநகர் காத்மண்டில் நடைபெற்ற சர்வதேச டாஜ்பால் விளையாட்டு போட்டியில் பங்கேற்ற, இவரது அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது.

சார்லஸ் கூறுகையில், "டாஜ்பால் விளையாட்டில் மாநில மற்றும் தேசிய அளவில் எங்களது அணி பல பதக்கங்களை பெற்றுள்ளது. சர்வதேச போட்டியில் ஏ, பி, சி, டி என நான்கு அணிகள் போட்டியிட்டன. பி பிரிவான எங்களது அணி வெற்றி பெற்றது. பள்ளிகளுக்கு இடையே விளையாட்டு போட்டிகளில், டாஜ்பால் விளையாட்டை சேர்த்து மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்த வேண்டும்" என்றார்.

போட்டி எப்படி?: உலக டாஜ்பால் பெடரேஷன், அமெரிக்கா வாஷிங்டன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. டாஜ்பால் விளையாட்டு, "பந்தை எறிந்து தாக்குதல்" என்பதை குறிக்கிறது. இதற்கான மைதானம், கபடி மைதானத்தை ஒத்து காணப்படுகிறது. தடைக்கோடு, தாக்கும் கோடு, புறக்கோடு, நடுக்கோடு, வலை, நடுக்கோட்டுக்கு இணையான ஒரு அடி கோடுகள் இருக்கும். இருபுறமும் அணிக்கு ஆறு வீரர்கள் விளையாடுவர்.

மைதானத்தின் நடுக்கோட்டில் இரண்டு பந்துகள் (டாஜ்பால்) வைக்கப்படும். நடுவர் விசில் அடித்தவுடன் இரு அணி வீரர்களும் இரண்டு பந்துகளை எடுத்துச் செல்வர். பந்தை எடுத்த வீரர், தாக்கும் கோட்டை கடந்தவுடன் எதிரணி வீரர்களை பந்துகள் மூலம் தாக்க வேண்டும். பந்தானது எதிரணி வீரர்களின் கழுத்துக்கு கீழே படுமாறு வீச வேண்டும். பந்து உடலில் பட்ட வீரர் ஆடுகளத்தில் இருந்து வெளியேற்றப்படுவார். போட்டிக்கான அவகாசம், 8 நிமிடம். அதன்பின், 5 நிமிடம் இடைவெளிக்குபின், அணி வீரர்கள் இடம் மாறி, 8 நிமிடம் விளையாட்டை தொடர வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us