தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/துணைவேந்தருக்கு பட்டாசு வெடித்து, மேளதாளம் முழங்க வரவேற்பு!

துணைவேந்தருக்கு பட்டாசு வெடித்து, மேளதாளம் முழங்க வரவேற்பு!

துணைவேந்தருக்கு பட்டாசு வெடித்து, மேளதாளம் முழங்க வரவேற்பு!


UPDATED : ஜூலை 08, 2014 12:00 AM

ADDED : ஜூலை 08, 2014 11:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 08, 2014 12:00 AM ADDED : ஜூலை 08, 2014 11:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் கல்யாணிக்கு நேற்று தடபுடல் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பத்து ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்ற வேண்டும் என்ற யு.ஜி.சி. விதி பின்பற்றப்படவில்லை எனக் கூறி ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் காமராஜ் பல்கலை துணைவேந்தர் பணி நியமனம் செல்லாது என உத்தரவிடப்பட்டது.

இதை எதிர்த்து துணைவேந்தர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கலான மேல்முறையீட்டில் ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கோர்ட் நிகழ்வுகள் நடந்தபோது அவர் சென்னையில் இருந்தார்.

கோர்ட் உத்தரவிற்குபின் நேற்று மதுரை வந்த அவருக்கு விமான நிலையத்தில் பல்கலை ஊழியர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்கலை வளாக நுழைவு வாயிலில் பட்டாசு வெடித்து, மேளதாளம் முழங்க அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

துணைவேந்தருக்கு சிலர் கறுப்புக் கொடி காட்டுவதாக தகவல் வெளியானதால் பல்கலையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us