தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்


UPDATED : ஜூலை 09, 2014 12:00 AM

ADDED : ஜூலை 09, 2014 11:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2014 12:00 AM ADDED : ஜூலை 09, 2014 11:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பொன்னேரியை அடுத்த காணியம்பாக்கம் பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 580 கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த கல்லூரி அனுப்பம்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. பொன்னேரி, மீஞ்சூர் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து மாணவர்கள் புறநகர் ரயில்கள் மூலம் அனுப்பம்பட்டு ரயில் நிலையம் சென்று, அங்கிருந்து செல்ல கல்லூரி பேருந்தை பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை மேற்கண்ட பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் அனுப்பம்பட்டு ரயில் நிலையத்தில் இறங்கி, அவர்களுக்காக காத்திருந்த கல்லூரி பேருந்தில் ஏறாமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், "கல்லூரி பேருந்தில் 40 முதல் 50 பேர் பயணிக்கக்கூடிய இடத்தில் 80 பேரை கட்டாயப்படுத்தி திணிக்கின்றனர். மேலும் கல்லூரி முதல்வர் மாணவர்களை தகாத முறையில் பேசி வருகிறார். அடிப்படை வசதிகளும் சரிவர செய்து தரப்படவில்லை. நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்" என்றனர்.

தகவல் அறிந்த மீஞ்சூர் காவல் ஆய்வாளர் செந்தில்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகத்திடம், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானம் செய்தார். அதன்பின் மாணவர்கள் காத்திருந்த பேருந்துகளில் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us