தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய தர நிர்ணய குழு மறுதர மதிப்பீட்டில் அழகப்பா பல்கலைக்கு தனித்துவம்

தேசிய தர நிர்ணய குழு மறுதர மதிப்பீட்டில் அழகப்பா பல்கலைக்கு தனித்துவம்

தேசிய தர நிர்ணய குழு மறுதர மதிப்பீட்டில் அழகப்பா பல்கலைக்கு தனித்துவம்


UPDATED : ஜூலை 09, 2014 12:00 AM

ADDED : ஜூலை 09, 2014 12:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2014 12:00 AM ADDED : ஜூலை 09, 2014 12:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை கழகத்தில் முதலாமாண்டு படிப்பில் புதிதாக சேர்ந்திருக்கும் மாணவர்களுக்கு மூன்று நாள் புத்தாக்க பயிற்சி துவக்க விழா பல்கலைகழக பட்டமளிப்பு விழா கலையரங்கில் நடந்தது. துணைவேந்தர் பொறுப்புக்குழு தலைவர் கலியமூர்த்தி துவக்கி வைத்தார்.
 
பதிவாளர் மாணிக்க வாசகம் பேசியதாவது: 13 கலை மற்றும் அறிவியல் பல்கலைக் கழகங்களில் அழகப்பா பல்கலைக் கழகம் தேசிய தர நிர்ணய குழுவின் மறுதர மதிப்பீட்டில் அதிகபட்ச புள்ளியான நான்கில் 3.21 புள்ளிகளை பெற்று தனித்துவம் பெற்ற பல்கலையாக திகழ்கிறது. தொலை தூர கல்வி வாயிலாக 1.25 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர் என்றார்.

விழாவில் தேர்வாணையர் உதயசூரியன், தொலை தூர கல்வி இயக்குனர் குருமூர்த்தி, பேராசிரியர்கள் கருத்தபாண்டியன், நாராயணமூர்த்தி, திருநாவுக்கரசு, யோகலெட்சுமி, சேகர், செந்தில், பால்தேவனேசன், ஜோதிபாசு பங்கேற்றனர்.

முன்னதாக மாணவர் நலன் பேராசிரியர் பாலசந்திரன் வரவேற்றார். குருமல்லேஸ்பிரபு நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us