தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ரயில்வே துறைக்கென்று ஒரு தனி பல்கலைக்கழகம்: சதானந்த கவுடா

ரயில்வே துறைக்கென்று ஒரு தனி பல்கலைக்கழகம்: சதானந்த கவுடா

ரயில்வே துறைக்கென்று ஒரு தனி பல்கலைக்கழகம்: சதானந்த கவுடா


UPDATED : ஜூலை 09, 2014 12:00 AM

ADDED : ஜூலை 09, 2014 03:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2014 12:00 AM ADDED : ஜூலை 09, 2014 03:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

2014 - 2015ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசும்போது அவர் இதை தெரிவித்தார். ரயில்வே தொடர்பான தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் தொழில்நுட்பம் சாராத படிப்புகள் இப்பல்கலையில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சதானந்த கவுடா கூறியதாவது: திறன் மேம்பாடு மற்றும் பட்டங்களைப் பெறுவதற்கான ரயில்வே சார்ந்த படிப்புகளை வழங்கும் வகையில், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட, ரயில்வே துறை உத்தேசித்துள்ளது.

இதற்கு இடைபட்ட காலங்களில், கடைமட்டத்தில் உள்ள ரயில்வே ஊழியர்கள், தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் சாராத, குறுகியகால படிப்புகளை மேற்கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படும். இதன்பொருட்டு, தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் உதவி பெற்றுக் கொள்ளப்படும்.

உயர்ந்தபட்ச வேகம், கனரக வாகனப் போக்குவரத்து போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில், அனைத்து மட்டங்களையும் சேர்ந்த ரயில்வே பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, தகுதியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us