தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர் சேர்க்கையில் தரகர்கள்: தரகுத் தொகை பிரச்னையால் தகராறு

மாணவர் சேர்க்கையில் தரகர்கள்: தரகுத் தொகை பிரச்னையால் தகராறு

மாணவர் சேர்க்கையில் தரகர்கள்: தரகுத் தொகை பிரச்னையால் தகராறு


UPDATED : ஜூலை 10, 2014 12:00 AM

ADDED : ஜூலை 10, 2014 11:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 10, 2014 12:00 AM ADDED : ஜூலை 10, 2014 11:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்: இன்ஜினியரிங் கல்லூரியில் மாணவர்களை சேர்ப்பதற்காக ஆள் பிடித்து கொடுத்த புரோக்கருக்கும், விடுதி மாணவர்களுக்கும் ஏற்பட்ட மோதலில், குமாரபாளையம் அருகே உள்ள தனியார் கல்லூரியின் கண்ணாடி உடைத்து சேதப்படுத்தப்பட்டதால் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். தனியார் கல்லூரி நிர்வாகத்தினர், புரோக்கர்கள் மூலமாக வெளி மாநில மாணவர்களை கல்லூரியில் சேர்த்துக் கொள்கின்றனர். அதற்காக ஆள் பிடித்துக் கொடுக்கும் புரோக்கர்களுக்கு பாடப்பிரிவுகளுக்கு ஏற்றார்போல் கமிஷன் தொகை வழங்கப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு குமாரபாளையம் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி விடுதியில் 400க்கும் மேற்பட்ட கேரள மாநில மாணவர்கள் தங்கி இருந்தனர். ஏற்கனவே அதே கல்லூரியில் பி.இ. படித்து முடித்துவிட்டு தற்போது புரோக்கர்களாக செயல்படும் சுராஜித், 32, ஜோபின், 30, ஆகியோர் தாங்கள் அழைத்து வந்த பத்துக்கும் மேற்பட்ட மாணவரை விடுதி பகுதியை சுற்றிக் காட்ட அழைத்து சென்றனர்.

விடுதியில் தங்கியிருந்த சில கேரள மாணவர்களிடம் புரோக்கர்கள் சுராஜித் மற்றும் ஜோபின் ஆகிய இருவரும் பேசிக் கொண்டிருந்த போது திடீரென ஒருவரை ஒருவர் தகாத வார்த்தையால் திட்டி மோதிக் கொண்டனர். பின்னர் இரவு 11.30 மணிக்கு மாணவர்கள் இரு கோஷ்டியாக பிரிந்து விடுதியின் நான்கு ரூம்களின் ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தினர். திடீர் முற்றுகை, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் குமாரபாளையம் போலீஸார் முற்றுகையில் ஈடுபட்ட மாணவர்களை சமாதானப்படுத்தினர். இதுதொடர்பாக கோழிக்கோட்டை சேர்ந்த டுஸ்னு, 18, முகம்மது சபீர், 19, ஆகியோர் கொடுத்த புகாரின் படி புரோக்கர்கள் சுராஜித், ஜோபின் உள்ளிட்ட 12 பேர் மீது போலீஸார் வழக்குபதிவு செய்தனர்.

போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: புரோக்கர் சுராஜித்தால் கல்லூரியில் சேர்க்கப்பட்ட சில கேரள மாணவர்கள், கல்லூரி கட்டணம் செலுத்தவில்லை. அதனால் கல்லூரி நிர்வாகம் புரோக்கருக்கு தர வேண்டிய கமிஷனை தரவில்லை. ஆவேசமடைந்த புரோக்கர் விடுதியில் தங்கியிருந்த மாணவரிடம் தட்டிக் கேட்டார். அதனால் மாணவர்கள் இரு கோஷ்டியாக பிரிந்து மோதிக் கொண்டனர்.

தொடர்ந்து கல்லூரியில் பதட்டமான சூழல் நிலவுவதால் வரும் 15ம் தேதி வரை கேரள மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டு, நேற்று அதிகாலை அனைவரும் அவரவர் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கேரளா மாணவர்களால் மாவட்ட முழுவதும் அடிக்கடி பிரச்னை ஏற்படுவதை கல்லூரி நிர்வாகங்கள் தான் முறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us