வணிகத் துறையில் அதிக வேலைவாய்ப்பு: வருமானவரி துணை ஆணையர் பேச்சு
வணிகத் துறையில் அதிக வேலைவாய்ப்பு: வருமானவரி துணை ஆணையர் பேச்சு
UPDATED : ஜூலை 10, 2014 12:00 AM
ADDED : ஜூலை 10, 2014 11:31 AM
திருச்சி: "இந்தியாவில் வணிக துறைக்கு அதிகளவில் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். அதற்கேற்ப வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது" என வருமான வரித்துறை துணை ஆணையர் ராமலிங்கம் தெரிவித்தார்.
திருச்சி தேசிய கல்லூரியில் வணிகவியல் பேரவை துவக்க விழா கல்லூரி முதல்வர் அன்பரசு தலைமையில் நடந்தது.
விழாவில் வருமான வரித்துறை துணை ஆணையர் ராமலிங்கம் பேசியதாவது: வணிகத்துறையில் ஏராளமான சவால்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. வணிகத்துறை, வங்கித்துறை, காப்பீடு துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் காத்திருக்கிறது. அதிக பணியாளர்களும் தேவைப்படுகின்றனர். இதை மாணவ மாணவியர் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
பட்டைய கணக்காளர்களாக வர விரும்புகிறவர்கள் பி.காம். படிப்போடு நின்று விடக்கூடாது. பட்டைய கணக்காளர்களாக வர கூடுதல் படிப்பும், அனுபவமும் அவசியம். வணிகத்துறையில் மட்டுமே யாரையும் சார்ந்து இருக்காமல் சொந்தமாக தொழில் செய்ய முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
வணிகவியல் துறை தலைவர் நாராணயசாமி, பேராசிரியர் சுந்தர்ராமன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வணிகவியல் மாணவர்கள் வெங்டேஷ், வெங்கடதிரி, ஆகாஷ், கனகராஜ் ஆகியோர் செய்தனர்.
