தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிரிட்டன் குகையில் ரோமானிய, உலோக கால நாணயங்கள் கண்டுபிடிப்பு

பிரிட்டன் குகையில் ரோமானிய, உலோக கால நாணயங்கள் கண்டுபிடிப்பு

பிரிட்டன் குகையில் ரோமானிய, உலோக கால நாணயங்கள் கண்டுபிடிப்பு


UPDATED : ஜூலை 10, 2014 12:00 AM

ADDED : ஜூலை 10, 2014 11:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 10, 2014 12:00 AM ADDED : ஜூலை 10, 2014 11:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

லண்டன்: பிரிட்டனின் டெர்பிஷயர் பகுதியில் உள்ள ஒரு குகையில் இருந்து 2000 ஆண்டுகளுக்கு முந்தைய ரோமானிய மற்றும் இரும்பு கால நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இரு வேறு நாகரிகங்களை சேர்ந்த நாணயங்கள் ஒரு சேர கிடைத்து இருப்பது இதுவே முதல் முறை.

இதுகுறித்து தொல்லியல் துறை நிபுணர் ராச்செல் ஹால் கூறியதாவது: பொதுவாக ரோமானியர் காலத்து நாணயங்கள், மைதானங்கள் போன்ற சமதள பகுதிகளில் தான் அதிகளவில் கிடைக்கும். ஆனால் இம்முறை குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள் பொருட்களை வாங்குவதற்கும், விற்பதற்கும் பயன்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டவை அல்ல.

இவற்றை வைத்திருப்பவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக மதிக்கப்பட்டனர்.மதிப்புமிக்க பொருட்களை மறைத்து வைப்பது போன்று, இந்த நாணயங்களையும் பண்டைய ரோமானிய மக்கள் மறைத்து வைத்து இருக்கலாம் அல்லது எதிர்காலத்தில் இதன் மதிப்பு அதிகரிக்கும் என்றும் மறைத்து வைத்திருக்கலாம்.

ரோமானியர்கள் மற்றும் இரும்பு காலத்து நாணயங்களை சேகரிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது கிடைத்துள்ள நாணயங்களை பிரிட்டிஷ் அருங்காட்சியகம் மற்றும் லண்டன் பல்கலைக் கழக கல்லூரியை சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வுகள் முடிந்த பிறகு இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுமக்கள் பார்வைக்காக பக்ஸ்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us