தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருந்தியல் பட்டயப் படிப்பு: விண்ணப்பிக்க 16ம் தேதி கடைசி

மருந்தியல் பட்டயப் படிப்பு: விண்ணப்பிக்க 16ம் தேதி கடைசி

மருந்தியல் பட்டயப் படிப்பு: விண்ணப்பிக்க 16ம் தேதி கடைசி


UPDATED : ஜூலை 10, 2014 12:00 AM

ADDED : ஜூலை 10, 2014 11:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 10, 2014 12:00 AM ADDED : ஜூலை 10, 2014 11:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: அரசு மருத்துவக்கல்லூரிகளில் டிப்ளமா இன் பார்மசி (டி - பார்ம்) படிப்பில் சேர இம்மாதம் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மதுரை, கோவை, தஞ்சாவூர் மருத்துவ கல்லூரிகளில் டி - பார்ம் படிப்புக்கு 240 இடங்கள் உள்ளன. இந்த படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பத்தை இம்மாதம் 15ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இம்மாதம் 16ம் தேதி மாலை 5:00 மணிக்குள் வந்து சேர வேண்டும். இட ஒதுக்கீடு அடுத்த மாதம் நடக்கும்.

மேலும் விவரங்கள் தேவைப்படுவோர் www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us