தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தடகளப் போட்டியில் முதலிடம் பிடித்த மாணவர்கள்

தடகளப் போட்டியில் முதலிடம் பிடித்த மாணவர்கள்

தடகளப் போட்டியில் முதலிடம் பிடித்த மாணவர்கள்


UPDATED : ஜூலை 11, 2014 12:00 AM

ADDED : ஜூலை 11, 2014 02:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 11, 2014 12:00 AM ADDED : ஜூலை 11, 2014 02:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியமேடு: பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற தடகள போட்டியில், ரோகித், பூஜா, ஆனந்தராஜ் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

விவேகானந்தா கல்வி குழுமம் சார்பில், விவகானந்தா பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கான தடகள போட்டிகள் நடந்தன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், நேரு விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடத்தப்பட்டன.

மொத்தம் 20 பள்ளிகளில் இருந்து, 700க்கும் அதிகமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பல்வேறு வயது பிரிவுகளில், சப்-ஜூனியர், ஜூனியர், சூப்பர் ஜூனியர் ஆகிய பிரிவுகளில், ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், ஈட்டி எறிதல் என பல்வேறு வகையான போட்டிகள் நடந்தன.

மேலும், அந்த பள்ளிகளை சார்ந்த ஆசிரியர், ஆசிரியைகளுக்கான ஓட்டப் பந்தயம், கயிறு இழுத்தல் போட்டிகளும் நடைபெற்றன. போட்டிகளில், சப்-ஜூனியர் ஆண்கள் பிரிவில், ரோகித் (பெரம்பூர்), இளஞ்செழியன் (குரோம்பேட்டை), இவன் ரசித் (குன்றத்துார்) ஆகியோர், முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

ஜூனியர் பெண்கள் ஈட்டி எறிதல் பிரிவில், பூஜா வியாஷ் (கொரட்டூர்) தங்க பதக்கமும், கலைவாணி (அம்பத்துார்) வெள்ளி பதக்கமும், ஹேமாவதி (சிவன்வாயல்) வெண்கல பதக்கமும் பெற்றனர். வட்டு எறிதல் ஆண்களில், ஆனந்தராஜ் (கொரட்டூர்), லோகேஷ்வரன் (குரோம்பேட்டை), குமுந்தன் (அம்பத்துார்) ஆகியோர், முதல் மூன்று இடங்களை பிடித்தனர். பெண்களில், பூர்வஜா முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us