தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அனைத்து படிப்புகளிலும் இடஒதுக்கீடு கோரி வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள்

அனைத்து படிப்புகளிலும் இடஒதுக்கீடு கோரி வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள்

அனைத்து படிப்புகளிலும் இடஒதுக்கீடு கோரி வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள்


UPDATED : ஜூலை 11, 2014 12:00 AM

ADDED : ஜூலை 11, 2014 02:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 11, 2014 12:00 AM ADDED : ஜூலை 11, 2014 02:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் அனைத்து படிப்புகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, கல்லுாரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி பல்கலைக்கழகம் கடந்த 1985 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டபோது, நிலம் கொடுத்த உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பும், புதுச்சேரி மாணவர்கள் கல்வி பயில 25 சதவீத இடஒதுக்கீடு தரப்படும் என, உறுதியளிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில், உறுதியளித்தபடி அனைத்து படிப்புகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீடு அளித்த பல்கலை., நிர்வாகம், அதன்பிறகு கண்டுகொள்ளவில்லை. புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்பட்ட போதிலும் சில படிப்புகளில் மட்டுமே 25 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தற்போது 10 புலங்கள், 37 துறைகள், 10 மையங்கள், 2 ஆய்வு இருக்கைகள் உள்ளபோதிலும் 16 படிப்புகளில் மட்டுமே இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது.

இதனைக் கண்டித்து பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி, தாகூர் கலைக்கல்லுாரி, சமுதாயக் கல்லுாரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக், மகளிர் பாலிடெக்னிக், கதிர்காமம் இந்திராகாந்தி கலை அறிவியல் கல்லுாரி உள்பட எட்டு கல்லுாரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியிலிருந்து பேரணியாக புறப்பட்டு பல்கலைக்கழக நுழைவு வாயிலை முற்றுகையிட்டனர். போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தடையை மீறி உள்ளே நுழைய முயன்ற மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட முயன்ற மாணவர்களை காலாப்பட்டு போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us