தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளி கட்டடத்தை சீரமைக்க கோரிக்கை

பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளி கட்டடத்தை சீரமைக்க கோரிக்கை

பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளி கட்டடத்தை சீரமைக்க கோரிக்கை


UPDATED : ஜூலை 11, 2014 12:00 AM

ADDED : ஜூலை 11, 2014 02:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 11, 2014 12:00 AM ADDED : ஜூலை 11, 2014 02:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடம்பத்துார்: கடம்பத்துார் அருகே, பழுதடைந்த நிலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட ராமன் கோவிலில் அமைந்துள்ளது, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. இங்கு, 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள இரண்டு கட்டடங்களும், மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

மேலும், பள்ளி சுவர்கள் மற்றும் மேற்கூரைப் பகுதியில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், மழைநீர், கட்டடத்தின் உள்ளே வருகிறது. இதனால், பள்ளி மாணவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, பள்ளி மாணவர்களின் நலன் கருதி, ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன், பழுதடைந்த பள்ளி கட்டடத்தை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us