தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்சுலின் ஊசிக்கு பதிலாக மாற்று மருந்து: பட்டதாரி வாலிபர் முயற்சி

இன்சுலின் ஊசிக்கு பதிலாக மாற்று மருந்து: பட்டதாரி வாலிபர் முயற்சி

இன்சுலின் ஊசிக்கு பதிலாக மாற்று மருந்து: பட்டதாரி வாலிபர் முயற்சி


UPDATED : ஜூலை 12, 2014 12:00 AM

ADDED : ஜூலை 12, 2014 10:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 12, 2014 12:00 AM ADDED : ஜூலை 12, 2014 10:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புவனம்: ஒருவகை தாவர காயிலிருந்து நானோ தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட "நானோ இன்சுலின் வாட்டர்" மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம் என திருப்புவனம் பட்டதாரி வாலிபர் நேசமணி முயற்சி செய்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் எம்.நேசமணி, இவர் மதுரை யாதவா கல்லூரியில் பி.எஸ்சி. மைக்ரோ பயாலஜி 2007-10ல் படித்தார். தற்போது தனியார் மினரல் வாட்டர் கம்பெனியில் மைக்ரோ பயாலஜிஸ்ட் ஆக உள்ளார். இவர் ஏற்கனவே சர்க்கரை நோயாளிகளின் புண் ஆறுவதற்கான புது "நானோ பார்முலாவில்" பிளாஸ்டர் பேண்டேஜ் தயாரித்து சென்னை ஐ.ஐ.டி.யில் சமர்ப்பித்து புதிய கண்டுபிடிப்பாளர் என்ற சான்றிதழ் பெற்றுள்ளார்.

இந்நிலையில் ஒரு தாவரக் காய்களிலிருந்து ஒருவகை கெமிக்கலை நானோ தொழில்நுட்பத்தில் பிரித்து எடுத்து "நானோ இன்சுலின் வாட்டர்" தயாரித்து உள்ளார்.

நேசமணி கூறுகையில், "ரத்தத்தில் சர்க்கரை சத்து அதிகரிப்பதால் சர்க்கரை நோய் உண்டாகிறது. கணையத்தில் இன்சுலின், குளுக்கான் என்ற இரண்டு சுரப்பிகள் சரிவர இயங்காததாலும் சர்க்கரை நோய் உருவாகிறது. இதில் குளுக்கான் சுரப்பி ஆல்பா செல்களையும், இன்சுலின் சுரப்பி பீட்டா செல்களையும் சுரக்கிறது. இது குறையும் பட்சத்தில் சர்க்கரை நோய் அதிகரித்து திடீர் மயக்கம் உடல் சோர்வு ஏற்படும்.

சரிபடுத்த மருந்து, மாத்திரை சாப்பிடுவது வழக்கம். அதிகபட்சமாக இன்சுலின் ஊசி போட்டுக்கொள்கின்றனர். அதற்குப்பதிலாக குறைந்த அளவு விலையில் தயாராகும் நானோ இன்சுலின் வாட்டர் குடித்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்" என்றார்.

இவரை 82201 30443 என்ற எண்ணிலும், mnesamani2014@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us