தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் ஒரு பட்டம்: அழகப்பா பல்கலை அறிமுகம்

ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் ஒரு பட்டம்: அழகப்பா பல்கலை அறிமுகம்

ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் ஒரு பட்டம்: அழகப்பா பல்கலை அறிமுகம்


UPDATED : ஜூலை 12, 2014 12:00 AM

ADDED : ஜூலை 12, 2014 11:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 12, 2014 12:00 AM ADDED : ஜூலை 12, 2014 11:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: யு.ஜி.சி. நிதியுதவியுடன் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக திறன் மேம்பாட்டு மையம் மூலம் நவ நாகரிக ஆடை வடிவமைப்பு தொழில் நுட்பவியல் (பேஷன் டெக்னாலஜி), மென்பொருள் ஆக்கவியல் (சாப்ட்வேர் டெவலப்மென்ட்) ஆகிய இரண்டு இளங்கலை தொழில் சார் படிப்புகள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மூன்றாண்டு இளம் தொழில்சார் பட்டப்படிப்பில் சேரும் மாணவர்கள் முதலாம் ஆண்டு முடிவில் பட்டய சான்றிதழும், இரண்டாம் ஆண்டின் முடிவில் உயர்நிலை பட்டய சான்றிதழும், மூன்றாம் ஆண்டின் முடிவில் இளநிலை பட்டமும் பெறலாம்.

மேற்கண்ட படிப்புகளில் சேர 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை.

விண்ணப்ப கட்டணம் ரூ.100. தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மாணவர்களுக்கு ரூ.50. விண்ணப்ப கட்டணத்தை பதிவாளர், அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி என்ற பெயரில் வங்கி வரைவோலையாகவோ, நேரிலோ செலுத்தலாம்.

விண்ணப்பப் படிவத்தை பல்கலைக் கழக இணையதளமான www.alagappauniversity.ac.in. மூலமாக பதிவிறக்கம் செய்து உரிய விண்ணப்ப கட்டணத்துடன் வருகிற ஆக.8ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விபரங்களுக்கு 04565 - 223 100, 229 062, 94438 50902 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பதிவாளர் மாணிக்கவாசகம் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us