UPDATED : ஜூலை 12, 2014 12:00 AM
ADDED : ஜூலை 12, 2014 11:47 AM
ஈரோடு: மத்திய அரசின் கிராமப்புற அமைச்சக வழிகாட்டுதலில் கனரா வங்கி தொழில் பயிற்சி நிலையம் சார்பில் பெண்களுக்கான அழகுக்கலை இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.
வரும் 16 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை 30 நாட்கள் ஈரோடு அசோகபுரம், லட்சுமி தியேட்டர் அருகே ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா சிறுவர் பள்ளி வளாகத்தில் பயிற்சி நடக்கிறது. பெண்கள், மகளிர் குழுவினர் பயன்பெறலாம்.
பயிற்சி பெற எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 45 ஆகும். பயிற்சிக்கு கட்டணம் இல்லை. மேலும் இலவச மதிய உணவு வழங்கப்படும்.
பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
கூடுதல் விவரம் பெற பயிற்சி நிலையத்தின் 0424 2290338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கனரா வங்கி முதுநிலை மேலாளர் பூபாலன் தெரிவித்துள்ளார்.
