முன்னாள் படை வீரரின் குழந்தைகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
முன்னாள் படை வீரரின் குழந்தைகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
UPDATED : ஜூலை 12, 2014 12:00 AM
ADDED : ஜூலை 12, 2014 12:06 PM
கரூர்: முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கு கவர்னரை தலைவராகக் கொண்ட தொகுப்பு நிதியில் இருந்து கீழ்கண்ட விவரப்படி கல்வி, பயிற்சி உதவித்தொகை வழங்கப்படவுள்ள்ளது.
மாவட்ட கலெக்டர் ஜெயந்தி கூறியதாவது: தொகுப்பு நிதியில் இருந்து கல்வி உதவித் தொகை கீழ்குறிப்பிட்ட இனங்களுக்கு இளநிலைப் படை அலுவலர் வரை தகுதிபெற்ற அனைவருக்கும் வருமான உச்சவரம்பின்றி கல்வி உதவித்தொகை பெற தகுதி உடையவராவார்கள்.
இளநிலை மற்றும் முதுநிலை தொழில்நுட்ப கல்வி, தொழிற்கல்வி, தொழில் சார்ந்த கல்வி பட்டப்படிப்புகள் அனைத்துக்கும் கல்வி உதவித்தொகை ஓராண்டுக்கு மட்டும் 10 ஆயிரம் ரூபாயும் மற்றும் விடுதியில் தங்கிப் படிப்பவர்களுக்கு மட்டும் விடுதிக்கட்டணம் 4,000 ரூபாயும் வழங்கப்படும்.
பட்டயப்படிக்கள் அனைத்துக்கும் கல்வி உதவித்தொகை ஓராண்டுக்கு மட்டும் 7.500 ரூபாயும், விடுதியில் தங்கிப் படிப்பவர்களுக்கு விடுதிக்கட்டணம் 4,000 ரூபாயும் வழங்கப்படும்.
தொழிற்கல்வி நிலைய சான்றிதழ் படிப்புகள் அனைத்துக்கும் கல்வி உதவித்தொகை ஓராண்டுக்கு மட்டும் 2,500 ரூபாயும் மற்றும் விடுதியில் தங்கி படிப்பவர்களுக்கு மட்டும் விடுதிக் கட்டணம் 4,000 ரூபாயும் வழங்கப்படும்.
ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மற்றும் கலை அறிவியல் வணிகவியல் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புக்காக 500 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை வழங்கப்படும்.
மேலும் பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை பெறத் தகுந்த படிப்புகளுக்கு முதலில் அத்திட்டத்துக்கு பரிந்துரைக்கப்பட்டு, அத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தொகுப்பு நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை பெற அனுமதிக்கப்படாத வர்களுக்கு தொகுப்பு நிதியில் இருந்து கல்வி உதவித் தொகை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
நடப்பாண்டு 2014-15 கல்வியாண்டுக்கு கல்வி உதவித் தொகை பெற விரும்பும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர், சார்ந்தோர் திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பம், விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.
கடைசி தேதி செப்டம்பர் 30ம் தேதி என தெரிவித்துள்ளார்.
