செவ்வாய் கிரக ஆய்வு: ரோவர் விண்கலத்தின் சக்கரத்தில் ஓட்டை
செவ்வாய் கிரக ஆய்வு: ரோவர் விண்கலத்தின் சக்கரத்தில் ஓட்டை
UPDATED : ஜூலை 14, 2014 12:00 AM
ADDED : ஜூலை 14, 2014 11:52 AM
வாஷிங்டன்: செவ்வாய் கிரக ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அனுப்பிய மார்ஸ் ரோவர் கியூரியாசிட்டி யின் சக்கரத்தில் பெரிய ஓட்டை ஏற்பட்டுள்ளது.
பூமியில் இருந்து 57 கோடி கி.மீ. தொலைவில் செவ்வாய் கிரகம் உள்ளது. கடந்த 2012 ஜனவரியில் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய நாசா விண்வெளி ஆய்வு மையம் மார்ஸ் ரோவர் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பியது.
ஏறக்குறைய எட்டு மாத பயணத்திற்குப் பின் அதே ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. செவ்வாய் கிரகத்தின் பல பகுதிகளை ஆய்வு செய்து அது தொடர்பான படங்களை நாசாவிற்கு அனுப்பி வருகிறது.
இரண்டு ஆண்டு கால ஆய்வுக்காக சென்றுள்ள ரோவரின் பணி இன்னும் முடிவடையாத நிலையில், அதன் ஆறு சக்கரங்களில் ஒரு சக்கரத்தில் ஓட்டை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் கூறியதாவது: ரோவர் விண்கலம் நகர்ந்து கொண்டிருக்கிறது. கூர்மையான கல் மீது ஏறியதால் ஓட்டை ஏற்பட்டிருக்கலாம். செவ்வாய் கிரக ஆய்வில் இது மிகப் பெரிய தடையாக இருந்தாலும், மீதமுள்ள ஐந்து சக்கரங்களின் உதவியுடன் ரோவர் விண்கலம் ஆய்வை தொடரும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

