தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய டிசைன் கல்வி நிறுவனத்திற்கு சிறப்பு அந்தஸ்து!

தேசிய டிசைன் கல்வி நிறுவனத்திற்கு சிறப்பு அந்தஸ்து!

தேசிய டிசைன் கல்வி நிறுவனத்திற்கு சிறப்பு அந்தஸ்து!


UPDATED : ஜூலை 14, 2014 12:00 AM

ADDED : ஜூலை 14, 2014 02:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 14, 2014 12:00 AM ADDED : ஜூலை 14, 2014 02:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேசிய டிசைன் கல்வி நிறுவனம்(National Institute of Design - NID), நாடாளுமன்ற சட்டத்தின் மூலம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் என்ற அந்தஸ்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் என்ற அந்தஸ்திற்கு கொண்டுவரப்படும் இந்திய கல்வி நிறுவனங்களில் இது 41வது கல்வி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அந்தஸ்திற்கு உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம், 1965ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இக்கல்வி நிறுவனம், தானாகவே இளநிலை, முதுநிலை உட்பட, பிஎச்.டி., பட்டங்கள் வரை வழங்க முடியும்.

"இந்தியாவில், டிசைன் கல்வி நிறுவனத்திற்கு தரப்பட்டுள்ள இந்த முக்கியத்துவமானது, நாட்டில், டிசைன் தொடர்பான கல்வி மேலும் வளர்ச்சியடைய ஏதுவாக இருக்கும் மற்றும் NID, தனது செயல்பாடுகளை மேலும் சிறப்பாக்கி சாதிக்க தூண்டுகோலாக இருக்கும்" என்று அக்கல்வி நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் என்ற அந்தஸ்தை பெறும் ஒரு உயர்கல்வி நிறுவனம், அரசிடமிருந்து சிறப்பு அங்கீகாரம் மற்றும் நிதியுதவியைப் பெறும் உரிமைப் பெற்றதாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us