மாற்றுத்திறனாளிகள் தொடர்பான முதுநிலை டிப்ளமோ படிப்பு
மாற்றுத்திறனாளிகள் தொடர்பான முதுநிலை டிப்ளமோ படிப்பு
UPDATED : ஜூலை 14, 2014 12:00 AM
ADDED : ஜூலை 14, 2014 04:18 PM
சென்னை: மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக பணியாற்றி வரும் வித்யா சாகர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், special education - multiple disabilities (physical & neurological) என்ற பிரிவில், முதுநிலை டிப்ளமோ படிப்பை மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.
இப்படிப்பு சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய புனர்வாழ்வு கவுன்சில்(Rehabilitation Council of India) ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்றது. இந்தப் படிப்பு, 3 மாத இன்டர்ன்ஷிப் கொண்ட, ஒரு ஆண்டு முழுநேர படிப்பாகும்.
இப்படிப்பை மேற்கொள்ளும் ஒருவர், பலவிதமான குறைபாடுகளைக் கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, எந்த கல்வி நிறுவனத்திலும், எவ்வாறு கற்பிக்கலாம் என்பதை கற்றுக் கொள்கிறார்கள்.
மேலும், இந்தப் படிப்பானது, தகவல்தொடர்பு திறனை அதிகரித்தல் மற்றும் மாற்று வழியைக் கண்டறிதல் தொடர்பான அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது.
இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள், சென்னைப் பல்கலையால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலையில் பட்டப் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். விரிவான தகவல்களுக்கு 9840035203.
