தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறந்த பள்ளிகளுக்கு ரூ.80 லட்சம் பரிசு: அரசு நிதி ஒதுக்கீடு

சிறந்த பள்ளிகளுக்கு ரூ.80 லட்சம் பரிசு: அரசு நிதி ஒதுக்கீடு

சிறந்த பள்ளிகளுக்கு ரூ.80 லட்சம் பரிசு: அரசு நிதி ஒதுக்கீடு


UPDATED : ஜூலை 16, 2014 12:00 AM

ADDED : ஜூலை 16, 2014 12:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 16, 2014 12:00 AM ADDED : ஜூலை 16, 2014 12:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு சிறந்த பள்ளிகளுக்கு பரிசாக ரூ.80 லட்சம் வழங்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

காமராஜர் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுவதை யொட்டி சிறந்த அரசு பள்ளிகளை ஊக்குவிப்பதற்கான பரிசளிப்பு திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கலெக்டர் தலைமையில் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உள்ளிட்ட குழுவினர் ஒரு மாவட்டத்துக்கு 4 சிறந்த பள்ளிகளை தேர்வு செய்கின்றனர்.

இவ்வாறு தேர்வு செய்யப்படும் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.1 லட்சமும், உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.75 ஆயிரமும், நடுநிலைப் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம், தொடக்கப் பள்ளிக்கு ரூ.25 ஆயிரமும் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

2014-15 ம் கல்வியாண்டில் பரிசு வழங்குவதற்காக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.56 லட்சமும், தொடக்க கல்வித் துறைக்கு ரூ.24 லட்சமும் அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதி மூலம் அந்த பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us