தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அனுமதி மறுப்பால் 750 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த முடியா நிலை

அனுமதி மறுப்பால் 750 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த முடியா நிலை

அனுமதி மறுப்பால் 750 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த முடியா நிலை


UPDATED : ஜூலை 17, 2014 12:00 AM

ADDED : ஜூலை 17, 2014 02:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 17, 2014 12:00 AM ADDED : ஜூலை 17, 2014 02:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில், ஐந்து சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) அனுமதி மறுத்துள்ளது. இதனால், 750 இடங்களில், மாணவர் சேர்க்கை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடைசி நேரத்தில்...

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை முதற்கட்ட கலந்தாய்வு, கடந்த மாதம் முடிந்தது. அரசு கல்லூரிகளில், 2,023; ஐந்து தனியார் கல்லூரிகளில், 498 என, மொத்தம், 2,521 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. திருவாரூர் மருத்துவக் கல்லூரி - 100; திருச்சி மருத்துவக் கல்லூரி - 50 (கூடுதல் இடம்); சேலம் மருத்துவக் கல்லூரி - 25 (கூடுதல் இடம்) என, 175 இடங்களுக்கு, எம்.சி.ஐ., அனுமதி தராமல் இருந்தது.

எம்.சி.ஐ., அனுமதிக்கான இறுதி நாள், நேற்று முன்தினம் முடிந்தது. கடைசி நேரத்தில், இந்த கல்லூரிகளுக்கு, எம்.சி.ஐ., அனுமதி அளித்தது. அதுபோன்று, கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரியில், 100 இடங்களுக்கும் அனுமதி கிடைத்து உள்ளது.

5 சுயநிதி கல்லூரிகள் கதி?

தமிழகத்தில், அன்னபூர்ணா மருத்துவக் கல்லூரி, சேலம்; சென்னை மெடிக்கல் காலேஜ் ஆஸ்பிட்டல், திருச்சி; மாதா மருத்துவக் கல்லூரி, சென்னை; முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி, சென்னை மற்றும் தாகூர் மருத்துவக் கல்லூரி, சென்னை என, ஐந்து சுயநிதி கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு, எம்.சி.ஐ., அனுமதி மறுத்துள்ளது. தலா, 150 இடங்கள் என, ஐந்து கல்லூரிகளில், 750 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எம்.சி.ஐ., அனுமதித்துள்ள இடங்களுக்கு, விதிமுறைப்படி இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 2ம் கட்ட கலந்தாய்வுஎம்.பி.பி.எஸ்., இரண்டாம் கட்ட கலந்தாய்வு, இம்மாதம், 21ம் தேதி துவங்குகிறது. மருத்துவக்கல்வி இயக்குனர் கீதாலட்சுமி கூறுகையில், "அரசு கல்லூரிகளில், 175 இடங்களில், 15 சதவீத மத்திய ஒதுக்கீடு போக, 149 இடங்கள் மாநிலத்திற்கு உள்ளன. கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரியில் இருந்து கிடைத்த, 65 இடங்களையும் சேர்த்து, 214 இடங்கள் உள்ளன" என்றார்.

26ம் தேதிக்குள்...

மேலும், "கடந்த கலந்தாய்வில் ஒதுக்கீடு பெற்று, மாணவர் திரும்ப ஒப்படைத்த இடங்களையும் சேர்த்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில், 21ம் தேதி துவங்கும். 26ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளோம்" என்றும் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us