தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில அளவிலான சதுரங்கப் போட்டி சாம்பியன்கள்

மாநில அளவிலான சதுரங்கப் போட்டி சாம்பியன்கள்

மாநில அளவிலான சதுரங்கப் போட்டி சாம்பியன்கள்


UPDATED : ஜூலை 18, 2014 12:00 AM

ADDED : ஜூலை 18, 2014 03:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 18, 2014 12:00 AM ADDED : ஜூலை 18, 2014 03:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பூந்தமல்லி: மாநில அளவிலான, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்ற சதுரங்க போட்டியில், 25 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், கண்ணன், தாமரை செல்வி ஆகியோர், சாம்பியன் பட்டம் வென்றனர்.

திருவள்ளூர் மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில், ஹர்குலிஸ் டர்போட்ரைவ் ஆதரவுடன், 17வது மாநில அளவிலான சதுரங்க போட்டி, பூந்தமல்லி செயின்ட் ஜோசப் பள்ளி வளாகத்தில் நடந்தது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளி, கல்லுாரிகளின் மாணவ, மாணவியர் 739 பேர் பங்கேற்றனர்.

இறுதி போட்டிகளில், ஆண்களில், எட்டு வயது பிரிவில் நிகில் மகிழ்னன், 10 வயது பிரிவில் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். 12 வயது பிரிவில் அர்ஜூன் கல்யாண், 14 வயது பிரிவில் ஹேமந்த்ராம், 25 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கண்ணன் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

பெண்களில், எட்டு வயது பிரிவில் சிரோயா, 10 வயது பிரிவில் சம்யுக்தா, 12 வயது பிரிவில் லட்சுமி ஆகியோர் முதலிடம் பெற்றனர். அடுத்து நடந்த 14 வயது பிரிவில், ஹர்ஷினி, 25 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தாமரை செல்வி ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர். ஆண்கள் பிரிவுகளில், குகேஷ், நிதின் சங்கர் மது, பிரஜேஷ், கோகுல்ராஜ், கார்த்திக் நாராயணன் ஆகியோர் இரண்டாம் இடம் பெற்றனர்.

பெண்கள் பிரிவுகளில், அவந்திகா, சிவானி மது, கிருத்திகா, கிரித்திகா, ஆர்த்தி ஆகியோர் இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொண்டனர். முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முதல் இடம் பிடித்தவர்களுக்கு, கூடுதலாக சைக்கிள்கள் பரிசாக வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us