தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலை பேராசிரியர்கள் நியமனம்: ஐகோர்ட் தடை

பல்கலை பேராசிரியர்கள் நியமனம்: ஐகோர்ட் தடை

பல்கலை பேராசிரியர்கள் நியமனம்: ஐகோர்ட் தடை


UPDATED : ஜூலை 19, 2014 12:00 AM

ADDED : ஜூலை 19, 2014 12:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2014 12:00 AM ADDED : ஜூலை 19, 2014 12:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை காமராஜர் பல்கலை இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் நியமனத்திற்கு ஐகோர்ட் கிளை தடை விதித்தது.

சிதம்பரம் அண்ணாமலை நகர் சேகர் தாக்கல் செய்த மனு: மதுரை காமராஜர் பல்கலை அரசியல் அறிவியல் துறையில் இணைப் பேராசிரியர் நியமனத்திற்கு பதிவாளர் ஜன. 22ல் அறிவிப்பு வெளியிட்டார். நான் அருந்ததியர் வகுப்பை சேர்ந்தவன். இணைப் பேராசிரியராக பணியாற்றி 12 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளது. பல்கலை நேர்காணலில் பங்கேற்றேன்.

ஏற்கனவே ஒரு வழக்கில் அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என பல்கலை தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதை பதிவு செய்த ஐகோர்ட் வழக்கை பைசல் செய்தது. ஆனால் அருந்ததியர் அல்லாத வேறு ஒருவருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல் ராசிபுரம் கலைவாணன் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார். பணி நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதி கே.கே.சசிதரன், துணைவேந்தர், பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us